Last Updated:
72 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்களையும், 80 டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட் களையும் சாகல் எடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யுஸ்வேந்திர சாகலின் பெயர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதற்கு அவருக்கும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா ஆகியோருக்கும் இடையே ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் மோதல் தான் முக்கிய காரணம்.
இருவரும் காதலித்து திருமணம் முடித்துக் கொண்ட நிலையில் தற்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் பரவியுள்ளன. தனிப்பட்ட வாழ்க்கை தவிர்த்து உலகின் மிகச்சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவராக சாகல் இருந்து வருகிறார்.
இவரை பிசிசிஐ தனது மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கி உள்ளது. இருப்பினும் சாகலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வருமானம் வருவதை பார்க்கலாம். வரவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முக்கிய ஆட்டக்காரர்கள் ஒருவராக சாகல் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிகவும் அறிவுபூர்வமான முறையில் பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் ஆற்றல் சாகலுக்கு உள்ளது. அரியானாவை சேர்ந்த அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி18 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இவருக்கு டெல்லி அருகே குரு கிராமத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களா உள்ளது.
விளையாட்டு துறையில் அவர் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக வருமானவரித்துறை ஆய்வாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்சம் மாதம் 1.25 லட்ச ரூபாய் வரை அவருக்கு வருமானம் கிடைக்கலாம்.
சாகலுடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 45 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. 72 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்களையும், 80 டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட் களையும் சாகல் எடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் சாகல் ஏற்படுத்தியுள்ளார். 160 போட்டிகளில் விளையாடி 205 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். இவருக்கு விளம்பரத்தின் மூலமாகவும் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது.
பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டாலும், விளம்பரம் ஐபிஎல் ஒப்பந்தம் உள்ளிட்டவற்றின் மூலம் வருமானத்தை குவித்து வருகிறார் சாகல்
January 11, 2025 6:33 PM IST