Last Updated:
அம்மா, அப்பா நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் எனக்கு சுந்தர்.சி முகம்தான் தெரிந்தது. மதகஜராஜா முகம்தான் தெரிந்தது.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விஷால் மதகஜராஜா படத்துடைய பிரிமியர் ஷோவுக்கு மீண்டும் பழைய கம்பீரமான தோற்றத்துடன் வந்தார். இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.
விஷால் நடிப்பில், சுந்தர். சி இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள படம் மதகஜராஜா. இந்த படம் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே வெளியாக வேண்டியது. ஆனால் சில காரணங்களுக்காக வெளியீடு தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
இந்நிலையில் பொங்கல் வெளியீட்டிலிருந்து அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பின்வாங்கியது. இதைத் தொடர்ந்து ஏற்கனவே வெளியீட்டிற்கு காத்திருந்த மதகஜராஜா, 10 ஹவர் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.
மதகஜராஜா திரைப்படம் நாளை முதல் வெளியாக உள்ளது. இதனையொட்டி இந்த படத்துடைய பிரிமியர் ஷோ இன்று நடத்தப்பட்டது. இதற்கிடையே முன்பு நடந்த படத்துடைய பிரமோஷன் நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கைகள் நடுங்கியபடி மைக்கை பிடித்துக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர் மீண்டும் பூரண உடல் நலம் பெற வேண்டுமென பலரும் விரும்பினார்கள் இந்த நிலையில் இந்த படத்துடைய பிரிமியர் ஷோ இன்று நடைபெற்றது. இதில் பழைய கம்பீரமான தோற்றத்துடன் விஷால் மிடுக்காக கலந்து கொண்டார். விழாவில் விஷால் பேசியதாவது-
இதுல ஒரு விஷயம் ஒரு விஷயம் தெரிஞ்சுகிட்டேன். இவ்வளவு பேர் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். மனதார வாழ்த்துகிறார்கள். வைரல் ஃபீவர் தான் அன்று அதிகமாக இருந்தது. அம்மா, அப்பா நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் எனக்கு சுந்தர்.சி முகம்தான் தெரிந்தது. மதகஜராஜா முகம்தான் தெரிந்தது.
இதையும் படிங்க – Game Changer | ‘புஷ்பா 2’, ‘கல்கி 2898 ஏடி’ வசூலை முந்துமா ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’?
எனக்கு தன்னம்பிக்கை தான் பலம். எங்க அப்பா தான் பலம். இது ரெண்டுதான் என்னுடைய பலம். உங்க அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். இன்னிக்கு மைக்கு நல்லா தான் இருக்கிறது. மைக்கு நடுங்கவில்லை. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். மதகஜராஜா படத்தை நிச்சயம் நீங்கள் ரசிப்பீர்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்
January 11, 2025 9:50 PM IST