Last Updated:

Vijay | “விஜய் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் ரீமேக்கா என்ன என்பது குறித்து படக்குழு அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை” என இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார்.

News18

Vijay | பாலகிருஷ்ணா படத்தை 5 முறை பார்த்த விஜய்.. ரீமேக் செய்ய கேட்டும் மறுத்த இயக்குநர்!நடிகர் விஜய், பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தை 5 முறை பார்த்ததாக நடிகர் விடிவி கணேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யுமாறு படத்தின் இயக்குநரை விஜய் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விடிவி கணேஷ், “கடந்த ஆண்டு நான் விஜயை நேரில் சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு அனில் ரவிபுடி நல்ல நண்பர். அவர் என்னுடைய கடைசி படத்தை இயக்குவார் என கூறியிருந்தார். பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தை விஜய், 5 முறை பார்த்திருக்கிறார்.

இந்தப் படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடியிடம் படத்தை இயக்குமாறு கோரியிருந்தார். ஆனால், இயக்குநர் அனில் ரவிபுடி படத்தை ரீமேக் செய்ய மாட்டேன் என்றார். விஜய்யின் கடைசி படத்தை இயக்க 4 முதல் 5 இயக்குநர்கள் காத்திருந்த நிலையில், அனில் ரவிபுடி, படத்தை இயக்க முன்வரவில்லை” என்றார்.

இதனையடுத்து பேசிய இயக்குநர் அனில் ரவிபுடி, “விஜய் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் ரீமேக்கா என்ன என்பது குறித்து படக்குழு அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

அதனால், அது தொடர்பாக இங்கே பேசுவது சரியாக இருக்காது. அதற்காக தான் விடிவி கணேஷை பேச விடாமல் தடுத்தேன். எதுவாக இருந்தாலும், அதிகாரபூர்வமாக அறிவித்த பின்பு பேசுவோம்” என்று முடித்தார்.





Source link