சியோமி நிறுவனமானது, இந்தியாவில் சியோமி பேட் 7ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 11.2 இன்ச் 3.2K டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 3 சிப்செட், ஃபோகஸ் கீபோர்டு மற்றும் பென் போன்ற புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், நிறுவனமானது ரூ.31,999 விலையில் அதன் பிரீமியம் வேரியண்டில் நானோ டெக்ஸ்ச்சர் கிளாஸ் டிஸ்ப்ளேவையும் அறிமுகப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி பேட் 7இன் சமீபத்திய வெளியீட்டின் மூலம், சியோமி நிறுவனமானது இந்தியாவில் அதன் ஹைப்பர்ஓஎஸ் எக்கோசிஸ்டம் அமைப்பை விரிவுபடுத்தி உள்ளது. இந்த சியோமி பேட்-இன் புதிய ஜெனரேஷன் கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் அதன் அறிமுகம் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்தன. பல மாதங்களுக்குப் பின்னர், இந்திய சந்தையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டேப்லெட்டுடன் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட டிராக்பேட் உடன் கூடிய ஃபோகஸ் கீபோர்டு (Focus Keyboard) மற்றும் புதுப்பிக்கப்பட்ட சியோமி ஃபோகஸ் பென் (Focus Pen) போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

அதன் முந்தைய மாடல்களுடன் ஒப்பிடுகையில், பேட் 7 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இருப்பினும், இந்த புதிய ஜெனரேஷன் சியோமி பேட்தான் அதிக பிரீமியம் மற்றும் மேட் ஃபினிஷ் டிஸ்ப்ளே அனுபவத்தை விரும்பும் யூசர்களுக்கு அதன் அதிக 12GB RAM + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கூடிய நானோ டெக்ஸ்ச்சர் டிஸ்ப்ளே விருப்பத்தை வழங்கும் முதல் சியோமி பேட் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பிரீமியம் அம்சங்களுடன் ஐபேட் ப்ரோ ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படும் நிலையில், பேட் 7 பிரீமியம் அம்சங்களுடன் இந்த பிரிவில் குறைவான விலையில் விற்கப்படுகிறது.

சியோமி பேட் 7 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

சியோமி நிறுவனமானது, அதன் பேட் 7ஐ இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் கொண்ட பேட் 7 ரூ.26,999 விலைக்கும், 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.29,999 விலைக்கும் மற்றும் முதல்முறையாக நானோ-டெக்ஸ்ச்சர் கிளாஸ் டிஸ்ப்ளேவுடன் கூடிய மற்றொரு 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட பேட் 7 ரூ.31,999 விலைக்கும் கிடைக்கிறது. மேலும், இதற்கு ரூ.1,000 வங்கிச் சலுகையும் வழங்கப்படுகிறது.

பேட் 7 ஜனவரி 13 முதல் விற்பனைக்குக் கிடைக்கும். அதே நேரத்தில் சியோமி பேட் 7 நானோ-டெக்ஸ்ச்சர் கிளாஸ் டிஸ்ப்ளே, சியோமி பேட் 7 ஃபோகஸ் பென் மற்றும் சியோமி பேட் 7 ப்ரோ ஃபோகஸ் கீபோர்டு ஆகியவை பிப்ரவரி 2025 முதல் Amazon.in, Mi.com மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சியோமி ரீடெய்ல் விற்பனைக் கடைகளில் கிடைக்கும். இதில், நானோ டெக்ஸ்ச்சர் டிஸ்ப்ளே வேரியண்ட் ஆன்லைன் தளங்களில் மட்டுமே கிடைக்கும்.

இதையும் படிக்க: இந்தியாவில் OnePlus 13 சீரிஸ் அறிமுகம்… விலை விவரங்கள் மற்றும் அம்சங்கள் உள்ளே…! 

இந்த புதிய சியோமி பேட் 7 கிராஃபைட் கிரே, மிராஜ் பர்பிள் மற்றும் சேஜ் கிரீன் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். கூடுதலாக, துணைக்கருவிகளைப் பொறுத்தவரை, சியோமி பேட் 7 ஃபோகஸ் கீபோர்டு ரூ.4,999 விலைக்கும், சியோமி பேட் 7 கவர் ரூ.1,499 -க்கும், சியோமி பேட் 7 ஃபோகஸ் பென் ரூ.5,999 மற்றும் சியோமி பேட் 7 ப்ரோ ஃபோகஸ் கீபோர்டு ரூ.8,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

சியோமி பேட் 7 சிறப்பம்சங்கள்

சியோமி பேட் 7 ஆனது, 3.2K ரெசலூசன் மற்றும் 345 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உடன் 11.2-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த டேப்லெட் 144Hz அடேப்டிவ் சிங்க் (AdaptiveSync) ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. இது 3:2 விகிதத்துடன் 12-பிட் கலர் டெப்த்தை கொண்டிருக்கிறது. இது வாசிப்பு, புரவுசிங் அல்லது மல்டிமீடியா பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகிறது.

ஒலியைப் பொறுத்தவரையில், இதில் டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவிற்கான சப்போர்டுடன் குவாட்-ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது. பேட் 7 ஆனது 6.18 மிமீ மெட்டல் யூனிபாடி டிசைனுடன், மிகவும் இலகுவானதாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் தோராயமாக இது 500 கிராம் எடை கொண்டது.

இதையும் படிக்க: ரியல்மி குடியரசு தின விற்பனை: தள்ளுபடி விலையில் கிடைக்கும் போன்களின் லிஸ்ட் இதோ…!

மேலும் இது, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 3 சிப்செட் பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது மல்டிடாஸ்கிங் மற்றும் கேமிங்கைக்கு ஏற்றதாக இருக்கும். மேலும், இதில் கேம் டர்போ என்கிற ஒரு ஆப்ஷனும் இடம்பெற்றுள்ளது, இது மேம்பட்ட அனுபவத்தை வழங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில், 8,850mAh பேட்டரி மற்றும் 45 வாட் வேகமான சார்ஜிங் அம்சங்களைக் கொண்டுள்ளது.

சியோமி மேலும் ஒரு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபோஸ் பென் (Focus Pen)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது வரைதல் மற்றும் எழுதுவதில் துல்லியத்திற்காக 8,132 பிரஷர் சென்சிட்டிவிட்டியுடன் வருகிறது. அதுமட்டுமின்றி, நிறுவனம் புதிய ஃபோகஸ் கீபோர்டு (Focus Keyboard)-ஐயும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இடம்பெற்றிருக்கும் டச்பேட் மற்றும் பேக்லிட் கீஸ் டைப்பிங்கின்போது மேம்பட்ட வசதியை வழங்குகின்றன.

பேட் 7 அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த சியோமி இந்தியாவின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. அனுஜ் சர்மா, “நானோ-டெக்ஸ்ச்சர் கிளாஸ் டிஸ்ப்ளேயில் இன்-பில்டு ஏஐ மேம்பாடுகள், சியோமி ஃபோகஸ் கீபோர்டு மற்றும் சியோமி ஃபோகஸ் பென் போன்றவற்றுடன் கூடிய முதல் பேடாக இருக்கும் எனவும், உற்பத்தித்திறன் மற்றும் படைப்பாற்றலை முற்றிலும் புதிய நிலைக்கு உயர்த்தும்” எனவும் கூறியுள்ளார்.

முன்னதாக, சியோமி பேட் 6 டேப்லெட்டுக்கு அறிவிக்கப்பட்ட 2 ஆண்ட்ராய்டு அப்கிரேடுகள் கிடைக்காது என்று சியோமி நிறுவனம் கூறிய நிலையில், பொருளை விற்ற பிறகு, தனது ஆரம்ப வாக்குறுதிக்கு எதிராகச் செல்வது சரியல்ல என பேட் 6 பயனர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link