மலையக ரயில் பாதையில் ஓஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான ரயில் பாதையில் இன்று(12) காலை மண் மேடு சரிந்து விழுந்ததால், பதுளை-கொழும்பு கோட்டை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
சேவையை சீர்செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.