Last Updated:

Mysskin | ஒரு படத்தின் சம்பளமாக ரூ.5 கோடியை கேட்க, அதற்கு இயக்குநர் மறுப்பு தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News18

இயக்குநர் மிஷ்கின் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் அண்மையில் ஒரு படத்தின் சம்பளமாக ரூ.5 கோடியை கேட்க, அதற்கு இயக்குநர் மறுப்பு தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் பாண்டிராஜ் கடைசியாக 2022-ம் ஆண்டு வெளியான சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கியிருந்தார். அடுத்து 2 வருடமாக அவர் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், அவர் தற்போது இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார்.

இதையும் வாசிக்க: Vijay | பாலகிருஷ்ணா படத்தை 5 முறை பார்த்த விஜய்.. ரீமேக் செய்ய கேட்டும் மறுத்த இயக்குநர்!

இந்தப் படம் குறித்து அண்மையில் நடிகை நித்யா மேனன் கூறுகையில், “பாண்டிராஜுடன் இணைந்து புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் மிஷ்கின் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது. ஆனால், அவர் நடிக்கவில்லை. சிறந்த கதாபாத்திரம், அதில் மிஷ்கின் நடிப்பார் என நான் எதிர்பார்த்திருந்தேன்” என்றார். தொடர்ந்து குறுக்கிட்ட மிஷ்கின், “அது பாண்டிராஜின் சதி.

அவர் என்னிடம் வந்து இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று கேட்டார். எத்தனை நாள் என கேட்டேன். ‘44 நாட்கள்’ என்றார். இது உன்னுடைய பாதி சம்பளம் ஆச்சே இது என்றேன். நடிக்க வேண்டுமென்றால், நான் வரவேண்டும், கேரவனை பயன்படுத்த வேண்டும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதனால் ரூ.5 கோடி சம்பளம் கேட்டேன் என நினைக்கிறேன். அதன்பிறகு பாண்டிராஜன் ஓடிவிட்டார். திரும்ப வரவேயில்லை. நான் கேட்ட சம்பளத்தை கொடுத்திருந்தால் நடித்திருப்பேன்” என்றார்.



Source link