கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விடுவிப்பதில் தாமதத்திற்கு முக்கிய காரணம் கொள்கலன் சோதனைகளுக்கான இடம் மற்றும் வசதிகள் இல்லாததே இதற்கு முதன்மை காரணமாகும் எனசுங்க ஊடகப் பேச்சாளரும், மேலதிக சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கோட விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இறக்குமதியாளர்கள், அனுமதி முகவர்கள், போக்குவரத்து முகவர்கள் மற்றும் கொள்கலன் அனுமதி செயல்முறைக்கு சரியான ஆதரவு இல்லாததும் தாமதத்திற்குக் காரணம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

தற்போது தினமும் 1,500 முதல் 3,000 வரையான கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், அவற்றில் 35% முதல் 40% வரையான கொள்கலன்கள் சோதனைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், ஏனையவைகள் மிக விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் – இடம் மற்றும் வசதிகள் இல்லாததே காரணம் appeared first on Daily Ceylon.



Source link