Last Updated:

அதில், “பொங்கலுக்கு களத்தில் இறங்க தயாராகி நிற்கிறான் – ராஜாக்கூர் கருப்பன்” என்கிற மாஸ் கேப்ஷனுடன் காளையுடன் தான் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

News18

ஜல்லிக்கட்டு காளையுடன் இருக்கும் வீடியோவை நடிகர் சூரி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

காமெடியனாக இருந்து தற்போது கதையின் நாயகனாக படங்களில் நடித்து வரும் சூரிக்கு கடந்த ஆண்டு சினிமாவில் சிறப்பாக அமைந்தது. அவரது ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ ஆகிய இரண்டு படங்களும் வரவேற்பை பெற்றன.

அடுத்து ‘விலங்கு’ வெப்சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் ஐஸ்வர்யா லட்சுமியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், ஜல்லிக்கட்டில் களம் காண உள்ள தனது காளையுடன் இருக்கும் வீடியோவை சூரி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில், “பொங்கலுக்கு களத்தில் இறங்க தயாராகி நிற்கிறான் – ராஜாக்கூர் கருப்பன்” என்கிற மாஸ் கேப்ஷனுடன் காளையுடன் தான் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Source link