Last Updated:
கடந்த ஆண்டு கட்டண உயர்வுக்கு பிறகும், 2025-ஆம் ஆண்டில் 5G டேட்டா, கால்ஸ் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய ரீசார்ஜ் பிளான்களை தேடும் ஜியோ யூஸர்கள் நீங்கள் என்றால், பட்ஜெட்டை எகிற வைக்காத சில சிறந்த ரீசார்ஜ் பிளான்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவின் முன்னணி மற்றும் பிரபல டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ,தனது யூஸர்களின் தேவைகளை பொறுத்து 5G டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட பெனிஃபிட்ஸ்கள் அடங்கிய ரூ.500-க்கும் குறைவான பல்வேறு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை வழங்குகிறது. கடந்த ஆண்டு கட்டண உயர்வுக்கு பிறகும், 2025-ஆம் ஆண்டில் 5G டேட்டா, கால்ஸ் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய ரீசார்ஜ் பிளான்களை தேடும் ஜியோ யூஸர்கள் நீங்கள் என்றால், பட்ஜெட்டை எகிற வைக்காத சில சிறந்த ரீசார்ஜ் பிளான்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
ஜியோவின் ரூ.198 ரீசார்ஜ் பிளான் விவரங்கள்: ரூ.198 என்ற இந்த மலிவு விலை பிளான் மொத்தம் 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. ஒரு நாளைக்கு 2GB வீதம் 14 நாட்களுக்கு மொத்தம் 28GB 5ஜி டேட்டாவை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் இந்த பிளானை ரீசார்ஜ் செய்வதன் மூலம் அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்-களை பெறுவார்கள்.
ஜியோவின் ரூ.349 ரீசார்ஜ் பிளான் விவரங்கள்: ரூ.349 என்ற விலையில் கிடைக்கும் இந்த பிளான் மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டி பீரியட் கொண்டது, மேலும் ஒரு நாளைக்கு 2GB 5ஜி டேட்டா வீதம் மொத்தம் 56GB டேட்டாவை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்-களையும் பெறலாம்.
ஜியோவின் ரூ.399 ரீசார்ஜ் பிளான் விவரங்கள்: ரூ.399 என்ற விலையில் கிடைக்கும் ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் பிளானை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 2.5GB 5ஜி டேட்டாவைப் பெறலாம். இந்த பிளான் 28 நாட்கள் வேலிடிட்டி பீரியட் கொண்டது. இந்த பிளானை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்-களையும் பெறுவார்கள்.
ஜியோவின் ரூ.448 ரீசார்ஜ் பிளான் விவரங்கள்: நீங்கள் ஒரு நாளைக்கு 2GB டேட்டா மற்றும் 5G ஸ்பீட் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ரீசார்ஜ் பிளானை தேடுகிறீர்களானால், இந்த பிளானை நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் மொத்தம் 28 நாட்களுக்கான வேலிடிட்டி பீரியட்டை கொண்டுள்ளது மற்றும் SonyLIV, Zee5 மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 12 OTT ஆப்ஸ்களுக்கான இலவச அணுக்களை யூஸர்களுக்கு வழங்குகிறது. இவற்றுடன் இந்த பிளான் அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS-களையும் வழங்குகிறது.
ஜியோவின் ரூ.449 ரீசார்ஜ் பிளான் விவரங்கள்: நீங்கள் அதிக டேட்டாவை பயன்படுத்தும் யூஸராக இருந்தால் இந்த ரூ.449 பிளானை ரீசார்ஜ் செய்யலாம். இந்த பிளான் ஒரு நாளைக்கு 3Gb 5ஜி டேட்டாவுடன் அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.
ஆனால் உங்களுக்கு 5G டேட்டா தேவையில்லை என்றால், ரூ.500-க்குக் கீழ் கிடைக்க கூடிய ஏராளமான 4G ரீசார்ஜ் பிளான்கள் உள்ளன. இதில் ரூ.189 பிளான், ரூ.249, ரூ.299 மற்றும் அதற்கு மேற்பட்ட பிளான்கள் அடங்கும். இந்த பிளான்கள் 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் டேட்டாவை வழங்குகின்றன.
January 12, 2025 3:20 PM IST