Last Updated:
Pongal Panai Sale: பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ஏரலில் வெண்கலம், பித்தளைப் பாத்திரங்கள் விற்பனை களைகட்டியுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் பொங்கல் பொங்குவது போல் விவசாயமும் வாழ்வும் பொங்கிச் செழிக்க வேண்டும் என்பதற்காகச் சூரிய பகவானுக்குப் படையலிட்டுப் பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்படுகிறது.
இந்த பொங்கல் பண்டிகைக்கு முக்கியமானதே பொங்கல் பானை தான். இதற்காகப் பல பகுதிகளிலும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே மண் பானை செய்யும் பணி துவங்கி, விற்பனை நடந்து வருகிறது. பல பகுதிகளில் மண் பானைகளில் பொங்கல் வைப்பது போல் தென் மாவட்டங்களில் பரவலாக வெண்கலம், பித்தளைப் பானைகளில் பொங்கல் வைக்கப்படுகிறது.
இந்த வெண்கலம், பித்தளை பொங்கல் பானை தயாரிப்பிற்கு தூத்துக்குடி மாவட்டத்தின் ஏரல் பகுதி பிரசித்தி பெற்றது. ஏரல் பகுதி பித்தளை, வெண்கலம் பாத்திரங்கள் மற்றும் குத்துவிளக்கு போன்றவற்றிற்குப் புகழ்பெற்றதாகும்.
இதையும் படிங்க: Gen Beta: 90ஸ் கிட்ஸ் எல்லாம் அங்கிள்… 2K கிட்ஸ் கூட பழசு தான்… ட்ரெண்டாகும் ஜென் பீட்டா தலைமுறை…
தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் சீர்வரிசை பாத்திரங்கள், வீட்டிற்குத் தேவையான பித்தளைப் பாத்திரங்கள், குத்துவிளக்கு போன்றவற்றை ஏரலில் வந்து வாங்குவது வழக்கம். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானை மற்றும் சீர்வரிசைகளை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் ஏரலில் குவிந்துள்ளனர்.
இது குறித்து மாரியப்பன் கூறுகையில், “பொங்கல் பானையிலேயே பல வகைகள் உள்ளது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது பித்தளை மற்றும் வெண்கலம் உருளியாகும். இந்த பானைகளைச் செய்வதற்கான முதல் மூலப் பொருள் செம்பு, அந்த செம்பில் மூன்றில் ஒரு பகுதி நாகம் வைத்து உருக்கும் போது தான் பித்தளை கிடைக்கிறது. அந்த பித்தளையில் வெள்ளியையும் சேர்த்தால் அது வெண்கலமாக மாற்றப்படுகிறது.
இந்த இரண்டு பாத்திரங்களில் உள்ளே ஈயம் பூசினால் தான் உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்த முடியும். ஈயம் பூசுவதன் மூலம் அது நஞ்சு தன்மையை உருக்குகின்றது. அதனால் ஈயம் பூசப்பட்ட பாத்திரங்களில் சமைப்பதன் மூலம் அது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
January 12, 2025 12:02 PM IST