Last Updated:

நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து பேட்ட, எந்திரன், அண்ணாத்த உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதில் ஜெயிலர் திரைப்படம் மற்ற அனைத்து படங்களையும் விடவும் வசூல் ரீதியாக மிகப் பெரும் வெற்றியை பெற்றது.

News18

ரஜினிகாந்தின் அடுத்த இரண்டு படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை சன் பிக்சர்ஸ் ஏற்படுத்தியுள்ளது. 14ஆம் தேதி மாலை 6 மணி அளவில் ரஜினியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து பேட்ட, எந்திரன், அண்ணாத்த உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதில் ஜெயிலர் திரைப்படம் மற்ற அனைத்து படங்களையும் விடவும் வசூல் ரீதியாக மிகப் பெரும் வெற்றியை பெற்றது.

2023 ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் 650 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த படத்தை சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. விறுவிறுப்பான திரைக்கதை, அப்பா மகன் சென்டிமென்ட், நடிகர் விநாயகனின் வில்லத்தனம், காமெடி, அனிருத் பாடல்கள் என மிகச் சிறந்த கமர்சியல் படமாக ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் 2-ஆம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான முதற்கட்ட தயாரிப்பு பணிகளில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கூலி படத்துடைய ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மார்ச் மாதத்துக்குள் இந்த படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை ரஜினிகாந்த் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்தை ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன ஆகஸ்ட் மாதத்தில் களம் இறக்க பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக 14ஆம் தேதி நாளை மறுதினம் மாலை 6 மணிக்கு ரஜினிகாந்த் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இது பெரும்பாலும் ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பாக இருக்கலாம் என தகவல்கள் தெரிகின்றன.

இதையும் படிங்க – Mysskin | ரூ.5 கோடி கேட்ட மிஷ்கின்…ஓடிய இயக்குநர்… விஜய் சேதுபதி படத்தில் நடந்தது என்ன?

இன்னும் சிலர் கூலி படம் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் நாளை மறுதினம் ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அப்டேட்டை வெளியிடப் போகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.





Source link