Last Updated:

Vanangaan | இயக்குநர் லெனின் பாரதி, ‘வணங்கான்’ படத்தையும், இயக்குநர் பாலாவையும் கடுமையாக சாடியுள்ளார். 

News18

இயக்குநர் லெனின் பாரதி, ‘வணங்கான்’ படத்தையும், இயக்குநர் பாலாவையும் கடுமையாக சாடியுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‘மேற்கு தொடர்ச்சி மலை’. இந்தப் படத்தை இயக்கியவர் லெனின் பாரதி. இவர் இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “பாலா அவர்களே.. மாற்றுத் திறனாளிகள் மேல் பெருங்கருணை கொள்கிறேன் என்கிற போர்வையில் உங்கள் ஆணாதிக்க & ஆழ்மன வக்கிரங்களை திரையில் நிகழ்த்தி பெண்கள் மற்றும் சிறார் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடும் எண்ணத்தையும் சமூகத்தையும் பின்னுக்கு இழுக்காதீர்கள்” என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்க: Vanangaan | வணங்கான் ரிவ்யூ: பாலா – அருண் விஜய் காம்போ கம்பேக் கொடுத்ததா?

அருண் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ‘வணங்கான்’. பாலா இயக்கியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



Source link