மஹிளா சம்மான் சேவிங் சர்டிபிகேட் (MSSC) என்றால் என்ன?
2023 யூனியன் பட்ஜெட்டில் மஹிளா சம்மான் சேவிங் சர்டிபிகேட் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டமானது பெண்களுக்கான சிறுசேமிப்புத் திட்டமாகும்.
முக்கிய அம்சங்கள்:
முதலீட்டு காலம்: 2 ஆண்டுகள்
வட்டி விகிதம்: டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படும். இந்த வட்டி ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் திரட்டப்படுகிறது. திட்டத்தில் சேர்ந்த ஒரு வருடம் கழித்து, கணக்கு வைத்திருப்பவர் முதலீடு செய்த தொகையில் இருந்து 40 சதவீதம் வரை எடுக்கலாம்.
தகுதி: அனைத்து குடியுரிமை இந்திய பெண்களும் தகுதியானவர்கள். மைனர் பெண்களும் கணக்கு வைத்திருக்கலாம், அந்த கணக்கை பாதுகாவலர்கள் மேனேஜ் செய்யலாம்.
முதலீட்டு வரம்பு: இந்தத் திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
பெண்கள் அருகிலுள்ள வங்கி அல்லது தபால் நிலையத்திற்குச் சென்று மஹிளா சம்மான் சேவிங் சர்டிபிகேட் திட்டத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஆதார் மற்றும் பான் போன்ற KYC ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
முதலீட்டு கால அளவு:
எடுத்துக்காட்டாக, அக்டோபர் 2023 முதல் உங்கள் கணக்கு தொடங்கப்பட்டால், அக்டோபர் 2025ல் உங்கள் கணக்கு முதிர்ச்சியடையும்.
MSSCஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
குறுகிய கால நிதி இலக்குகளுக்கு, குறிப்பாக பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானம் தேடும் பெண்களுக்கு MSSC ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதையும் படிக்க: எஸ்பிஐ வங்கியின் 444 நாட்கள் FD vs பேங்க் ஆஃப் பரோடாவின் 400 நாட்கள் FD… ஒப்பீடு இதோ…!
சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) என்றால் என்ன?
பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ பிரச்சாரத்தின் கீழ் 2015இல் சுகன்யா சம்ரிதி யோஜனா தொடங்கப்பட்டது. சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது ஒரு பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
வட்டி விகிதம்: டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படும்.
தகுதி: 0-10 வயதுடைய பெண் குழந்தைகள் கணக்கு தொடங்கலாம்.
முதலீட்டு வரம்பு: ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
இதையும் படிக்க: Bhima Sakhi Yojana: எல்ஐசி-ன் பீமா சகி யோஜனா; தொடங்கிய ஒரு மாதத்திற்குள் 50,000க்கும் மேற்பட்ட பதிவுகள்…!
முதலீட்டு கால அளவு: 15 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்பட வேண்டும். மேலும் இந்த பாலிசி 21 வயதில் முதிர்ச்சியடையும்.
வரி நன்மைகள்: சுகன்யா சம்ரிதி யோஜனாவில் வரி விலக்கின் பலனையும் பெறுவீர்கள். 80சி பிரிவின் கீழ், ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு கிடைக்கும்.
பணத்தை திரும்பப் பெறுதல்:
பெண் 18 வயதைத் தாண்டிய பிறகு, மேற்படிப்புக்காக 50 சதவீதத் தொகையை திரும்பப் பெறலாம். பெண் 21 வயதை அடைந்த பிறகு திட்டத்தில் உள்ள தொகையை திரும்பப் பெறலாம்.
எந்த திட்டம் உங்களுக்கு சிறந்தது?
குறுகிய கால திட்டம்: மஹிளா சம்மான் சேவிங் சர்டிபிகேட் திட்டமானது, குறைந்த வருமானத்துடன் கூடிய பாதுகாப்பான, குறுகிய கால சேமிப்புத் திட்டத்தை தேடும் பெண்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
நீண்ட கால திட்டம்: சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டமானது, தங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்பும் பெற்றோருக்கு, குறிப்பாக கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கு மிகவும் பொருத்தமான தேர்வாக அமைகிறது.
January 13, 2025 12:59 PM IST