கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கக் கோரி, மாணவியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, டிச. 12 ஆம் திகதி ஆராய்வதற்கு உயர் நீதிமன்றம் (25) தீர்மானித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்னாண்டோ மற்றும் பிரியந்த பெர்ணாந்து ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
இந்த முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவி ஹன்சனி அழககோன் தாக்கல் செய்த மனுவில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
The post A/L பரீட்சையை தடுக்கும் மனு: டிச.12 இல் ஆராய்வதற்கு முடிவு appeared first on Thinakaran.