கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படத்தில் தானும் இருந்ததாக சூரி கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்தில் மறுமலர்ச்சி, ரெட், வின்னர் உள்ளிட்ட படங்களில் கிடைத்த சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் நடிகர் சூரி. மக்களின் கவனம் இவரின் பக்கம் திரும்பாமலே இருந்தது. அதன் பின் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் சூரிக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. மேலும் படத்தில் சூரியின் பரோட்டா காமெடி மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது.
இதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற சூரி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க தொடங்கினார். இவருக்கான ரசிகர் பட்டாளம் பெருகியது. நகைச்சுவை நடிகராக ரசிகர்களை சிரிக்க வைத்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை பாடத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கினார். படத்தில் சூரியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவர் நடித்திருந்த கருடன் மாபெரும் வெற்றி பெற்றது.
வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்த விடுதலை படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த சூரி தான் படையப்பா படத்தில் பணியாற்றியதாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூறினார்.
ஆச்சரியமடைந்த கே.எஸ்.ரவிக்குமாரிடம், அவர் இயக்கிய படையப்பா படத்தின் நடிகர்களுக்கு fan போடும் வேலையை சூரி செய்ததாக கூறினார். அதைப்போலவே, அஜித்தின் வில்லன் படத்தின் செட்டிலும் சூரி பணியாற்றியதாக தெரிவித்தார். இந்த தகவலை கேட்ட கே.எஸ்.ரவிகுமார் ஆச்சர்யம் அடைந்துள்ளார்.
.