விலையுயர்ந்த பொருட்களை பரிசாக அளித்தபோதும் அவை பயனற்று போனதாக முன்னாள் கணவர் நாகசைதன்யாவை விமர்சித்துள்ளார் நடிகை சமந்தா.
தான் செய்ததிலேயே அதிக வீணான செலவு நாகசைதன்யாவுக்கு தான் என முன்னாள் கணவர் பெயரை குறிப்பிடாமல் நடிகை சமந்தா பேசியுள்ளார். பாலிவுட் நடிகர் வருண் தவானுடனான நேர்காணலில் நடிகை சமந்தா பல்வேறு ருசிகர தகவல்களை பகிர்ந்துகொண்டார். அதில் வீணான செலவு எதற்காக செய்தீர்கள் என்று வருண் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நடிகை சமந்தா, தனது திருமண பந்தத்தை குறிப்பிடாமல், தனது முந்தைய உறவில்தான் அதிக செலவு வீணாக செய்ததாக கூறினார். அந்த உறவில் அதிக விலையுயர்ந்த பொருட்களை பரிசாக அளித்தபோதும் அது அனைத்தும் பயனற்று போனதாகவும் குறிப்பிட்டார்.
சமந்தா குறிப்பிடும் எக்ஸ் என்பது, முன்னாள் கணவர் நாகசைதன்யா தான் என்று ரசிகர்கள் கமென்ட்ஸ் செய்து வருகின்றனர். 4 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நாகசைதன்யாவும்-நடிகை சமந்தாவும் அண்மையில் விவாகரத்து பெற்ற நிலையில் சமந்தாவின் இந்த பேச்சு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
.
- First Published :