நடிக்க அறிமுகமாகி ஐந்து ஆண்டுகளில் வாய்ப்பை இழக்கும் நடிகைகளுக்கு நடுவே அறிமுகம் ஆகி 20 ஆண்டுகளை கடந்தும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர். 2002 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தில் முதன்முதலில் நாயகியாக த்ரிஷா அறிமுகமானார். அஜித்தின் விடாமுயற்சி, விஜயின் லியோ என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் முதன்மைத் தேர்வாக இன்றும் திகழும் த்ரிஷா நடிக்க அறிமுகமாகி 21 ஆண்டுகள் ஆகின்றது.
சில ஆண்டுகளுக்கு முன் இவரது மார்க்கெட் சரிந்தாலும் தனது விடாமுயற்சியின் மூலம் விட்ட மார்க்கெட்டை 96 படத்தின் மூலம் மீண்டும் பிடித்தார். பொன்னியின் செல்வன் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்து த்ரிஷா அடுத்தடுத்து லியோ, விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைப்’ படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு அவர் நடனமாடியுள்ளார் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மற்றும் மலையாள மொழிகளில் த்ரிஷாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நுழைவதற்கு முன் த்ரிஷா மாடலிங் துறையில் இருந்தவர் என்று நம்மில் பலருக்கும் தெரியும், அதே போல், 1991ம் ஆண்டு நடந்த மிஸ் சென்னை போட்டியில் ‘மிஸ் சென்னை’ பட்டத்தை தட்டி சென்ற த்ரிஷா, 2001ம் ஆண்டு “Miss Beautiful Smile” என்ற பட்டத்தையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட த்ரிஷாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
போட்டோவை பார்த்த ரசிகர்கள் அட நம்ம த்ரிஷா இது.. என்று ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
.