Last Updated:

Teaser | ஹாரர் த்ரில்லர் படமான இதனை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அர்ஜுன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

News18

பா.விஜய் இயக்கத்தில் ஜீவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘அகத்தியா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜீவாவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது ‘பிளாக்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் புதிய படத்தில் ஜீவா நடித்துள்ளார். உலக அளவில் பிரபலமான ‘ஏஞ்சல்ஸ் vs டெவில்’ கதைக்கருவுடன் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘அகத்தியா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஹாரர் த்ரில்லர் படமான இதனை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அர்ஜுன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 84 வருடங்களுக்கு முன்பு பங்களா ஒன்றில் நடந்த மர்மமான விஷயங்கள் குறித்து தொடக்கத்திலேயே இன்ட்ரோ கொடுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: Siragadikka Aasai | மனோஜ் கடைக்கு ஓனராகும் அண்ணாமலை.. விஜயா ரோகிணிக்கு தரும் புதிய நெருக்கடி..!

அந்த சம்பவங்களை நோக்கி நகரும் காட்சிகளில், டைம் டிராவல், அச்சுறுத்தும் குகை, அர்ஜுனின் கெட்டப், ரத்தம், இருள், என ஆகியவை கவனம் பெறுகிறது. மொத்த டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜனவரி 31 திரையரங்குகளில் வெளியாகிறது.



Source link