செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக வேலைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், லிங்க்ட்இன் தலைமை நிர்வாக அதிகாரி ரியான் ரோஸ்லான்ஸ்கி வேலை வாய்ப்புகளில் நிகழும் பல மாற்றங்கள் குறித்த விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
உண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI) வேலையில் உள்ள மக்களுக்கு சவால்களை உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற USISPF இந்தியா லீடர்ஷிப் உச்சி மாநாட்டில் பேசிய ரோஸ்லான்ஸ்கி, இந்தியாவில் கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்த வேலைகளை செய்வதற்கு தேவைப்பட்ட திறன் தற்போதைய நிலவரப்படி சுமார் 40% மாறிவிட்டது. மேலும் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இது 70 சதவிகிதம் மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாறி கொண்டே இருக்கும் வேலை: இந்தியாவில், இன்று இருக்கும் அதே ஜாப் டைட்டிலை 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அந்த வேலையைச் செய்வதற்குத் தேவையான திறமை 2015-ல் இருந்து தற்போது 40 சதவீதம் மாறிவிட்டது. வரும் 2030-க்குள் இது 70 சதவீதம் மாறும் என்று நாங்கள் கணித்துள்ளோம். AI காரணமாக வேலைகள் வேகமாக மாறுகின்றன. எனவே உங்கள் திறன்களை மேம்படுத்துவது கட்டாயமாகிவிட்டது. நீங்கள் உங்கள் வேலையை மாற்றுகிறீர்களோ இல்லையோ, உங்களைச் சுற்றி வேலை மாறிக்கொண்டே இருக்கிறது என்றார்.
யார் புதிய வேலையை தேட வேண்டும்?: AI வந்த பிறகு வேலையில் இருப்பவர்கள் மத்தியில் எழுந்துள்ள மிகப்பெரிய விவாதம் AI-க்கு பின் நம் வேலைகள் பாதுகாப்பாக இருக்குமா என்பதுதான். உச்சிமாநாட்டில் பேசிய ரியான் ரோஸ்லான்ஸ்கி, நீங்கள் செய்யும் வேலை AI செய்யக்கூடிய ஒரு வகையான ஆட்டோமேஷன் பணி என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் ஒரு புதிய வேலையைத் தேடத் தொடங்க வேண்டும் என்று கூறினார். உங்களின் தற்போதைய வேலையை வெறும் வேலையாக பார்க்காதீர்கள் என்றார் ரோஸ்லான்ஸ்கி. அதன் முழு வேலை அமைப்பையும் புரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்க:
டூயல் AMOLED டிஸ்ப்ளே கொண்ட லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
அந்த செயல்பாடுகளை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, அதில் AI-ன் பங்கு அல்லது திறன் என்னவாக இருக்கும் எனபதையும் நீங்கள் புரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார். சுருக்கமாக சொன்னால் உங்கள் வேலை என்பது automated task-ஆல் மட்டுமே செய்து விட முடியும் என்பதை நீங்கள் கண்டறிந்தால், உடனடியாக ஒரு புதிய வேலையைத் தேடத் தொடங்க வேண்டும், என்று ரோஸ்லான்ஸ்கி கூறினார்.
AI-ஐ ஒரு வாய்ப்பாக பார்க்கவும்: AI-ஐ ஒரு போட்டியாளராக மட்டும் பார்க்காமல், ஒரு வாய்ப்பாகவும் பார்க்க வேண்டும். AI நமது வேலைகளில் நிறைய மாற்றங்களை தரப்போகிறது என்பது உண்மை தான். ஆனால் இந்த மாற்றங்களுக்கு மத்தியில், பல புதிய வாய்ப்புகளும் வரும் என்றார். இளைய தலைமுறையினர் நம்பமுடியாத தொழில்நுட்பம் மற்றும் மாற்றங்கள் நிறைந்த உலகிற்குள் நுழைகின்றனர், இது உலகிலேயே சிறந்த வாய்ப்பாகும் என்று LinkedIn CEO கூறினார். தொழிற்புரட்சியுடன் ஒப்பிட்டு, அதன் வருகைக்குப் பிறகு 18-ஆம் நூற்றாண்டில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பல புதிய விஷயங்கள் நடந்தன. இதேபோல் AI யும் இதுபோன்ற வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.
மாநாட்டில் தெடர்ந்து பேசிய ரோஸ்லான்ஸ்கி, இளைஞர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். மிக முக்கியமான திறமை என்னவென்றால், எப்படி கற்றுக்கொள்வது என்பதை கற்பது மற்றும் ஏற்று கொள்வது. ChatGPT போன்ற சில புதிய டூல்ஸ் வெளிவரும் போது, அதைக் கற்றுக் கொண்டு அவற்றுடன் முன்னேறுங்கள்.
இதையும் படிக்க:
Google லென்ஸில் இனி AI.. புதிய அப்டேட்டை தரமாக இறக்கிய கூகுள்
இரண்டாவது மனித சக்தி, பச்சாதாபம், கருணை மற்றும் நெறிமுறை தீர்ப்பு உள்ளிட்டவற்றை மறந்துவிடாதீர்கள். இவை விமர்சன ரீதியாக முக்கியமானவை. ஒன்று நினைவில் கொள்ளுங்கள் AI எல்லாவற்றையும் கையகப்படுத்தப் போவதில்லை. எனவே மனித திறன்களில் சிலவற்றில் நீங்கள் வலிமையானவர் என்று நீங்கள் நினைத்தால் தொடர்ந்து சிறப்பாகவே செயல்படலாம்.
பருவநிலை மாற்றம், சுகாதாரம் மற்றும் நோய் பிரச்சனைகளை தீர்க்க இளைஞர்களும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றார்.” இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் முதன்முறையாக, இந்த பிரச்சனைகளை வேறு விதமாக தீர்க்கக்கூடிய தொழில்நுட்பங்கள் தற்போது உள்ளன.
வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு என்பதால், சிறந்த உலகத்தை உருவாக்க அவற்றைப் பயன்படுத்த முயற்சிக்கவும். இந்த நவீன தொழில்நுட்பங்கள் உங்களுக்கும் உலகிற்கும் என்ன அர்த்தம் தரக்கூடியது என்பது குறித்து பெரிதாக கனவு காணுங்கள் என்றார். AI உற்பத்தித்திறனை அதிகரிக்க பயன்படுத்தப்படலாம், தொழிலாளர் தொகுப்பை அதிகரிக்க பயன்படுத்தலாம். ஆனால் சில நேரங்களில் இதை நினைத்து பயமாக இருக்கிறது என்றார்.
.