Last Updated:

Ajith | துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமார் தனது குழுவுடன் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் இன்று அவர் அளித்த பேட்டியில், அஜித்திடம், ‘உங்கள் ரசிகர்கள் வருவார்கள் என நீங்கள் எதிர்பார்த்தீர்களா?’ என கேட்டதற்கு, “நான் இதை எதிர்பார்க்கவில்லை.

News18

“2 படங்களில் நடித்து முடித்திருக்கிறேன். அதில் ஒரு படம் ஜனவரியிலும், மற்றொரு படம் ஏப்ரலில் வெளியாகும். அந்த வகையில் இது ரேஸுக்கான நேரம். இங்கு குழுமியிருக்கும் மக்களை பாருங்கள். அவர்களை நான் அளவு கடந்து நேசிக்கிறேன்” என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமார் தனது குழுவுடன் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் இன்று அவர் அளித்த பேட்டியில், அஜித்திடம், ‘உங்கள் ரசிகர்கள் வருவார்கள் என நீங்கள் எதிர்பார்த்தீர்களா?’ என கேட்டதற்கு, “நான் இதை எதிர்பார்க்கவில்லை.

நான் அவர்களை அளவுகடந்து நேசிக்கிறேன். கார் ரேஸிங்கில் என்னுடைய குழுவினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் 7வது இடத்தை அடைந்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக ரேஸிங்கில் ஈடுப்பட்டு வருகிறேன். அந்த அனுபவம் பலனளிக்கும் என நினைக்கிறேன்.

நடிப்பும், ரேஸும் உடல்ரீதியாகவும், எமோஷனலாகவும் பெரும் பங்கு வகிப்பவை. நீங்கள் அதை எப்படி கையாள்கிறீர்கள், எதை முதன்மைப்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்தது. நான் மல்டி டாஸ்கிங்கில் கவனம் செலுத்துகிறேன்.

தற்போது 2 படங்களில் நடித்து முடித்திருக்கிறேன். அதில் ஒரு படம் ஜனவரியிலும், மற்றொரு படம் ஏப்ரலில் வெளியாகும். அந்த வகையில் இது ரேஸுக்கான நேரம். இங்கு குழுமியிருக்கும் மக்களை பாருங்கள். அவர்களை நான் அளவு கடந்து நேசிக்கிறேன்” என்றார்.





Source link