Last Updated:

Allu Arjun: இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராம்கோபால்பேட் போலீசார், மீண்டும் ஒரு கூட்ட நெரிசல் சம்பவம் நிகழலாம் எனக் கூறி அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

News18

புஷ்பா இரண்டாம் பாகம் பிரிமீயர் ஷோ கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில், சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் ஆஜரானார்.

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி ஐதராபாத் சந்தியா திரையரங்கில் வெளியான புஷ்பா இரண்டாம் பாகம் பிரீமியர் ஷோவுக்கு வந்த அல்லு அர்ஜுனை காண ரசிகர்கள் திரண்டதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த நிலையில், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கு தொடர்பாக அல்லு அர்ஜுனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டது.

இதையடுத்து, சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் ஆஜரானார். இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் மகனை காண உள்ளதாக அல்லு அர்ஜுன் அனுமதி கோரினார்.

Also Read | Maharaja | ‘மகாராஜா’ தாக்கம்.. தியேட்டரை கண்ணீரால் நிறைக்கும் சீனர்கள்: ஒரே மாதத்தில் இத்தனை கோடிகளா?

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராம்கோபால்பேட் போலீசார், மீண்டும் ஒரு கூட்ட நெரிசல் சம்பவம் நிகழலாம் எனக் கூறி அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

அதில், “பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்புடன் சிறுவனை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்படும். ஒத்துழைக்க மறுத்தால், அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நீங்கள்தான் முழு பொறுப்பேற்க வேண்டும்” என கெடுபிடியுடன் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.



Source link