திங்கள் கிழமை வரை அல்லு அர்ஜுன் மீது சட்ட நடவடிக்கைகளை தொடர தடை விதிக்க வேண்டும் என்று தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் வக்கீல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அல்லு அர்ஜுன் வக்கீல் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. இந்த நிலையில் அல்லு அர்ஜுனை போலீசார் இன்று அவருடைய வீட்டில் அதிரடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் சிக்கட்பள்ளி போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் வக்கீல் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் திங்கள்கிழமை வரை அல்லு அர்ஜுன் மீதான சட்ட நடவடிக்கைகளை தொடர தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு மீது மதிய உணவு இடைவேளையில் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் அல்லு அர்ஜுனை கைது செய்து விசாரணை நடத்தி வரும் சிக்கட்பள்ளி காவல் நிலையத்திற்கு அவருடைய ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்து வருகின்றனர்.
எனவே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அல்லு அர்ஜுனுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கும் தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
.