Last Updated:

நான் மும்பையிலிருந்து வெளியேறலாம் என முடிவு செய்திருக்கிறேன். தென்னிந்தியாவுக்கு செல்ல இருக்கிறேன். எங்கே எனக்கு உத்வேகம் எங்கு கிடைக்குமோ அங்கு செல்ல உள்ளேன் – அனுராக் காஷ்யப்

News18

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தான் சார்ந்திருக்கும் இந்தி திரையுலகை கடுமையாக சாடியுள்ளார். “பாலிவுட் திரையுலகை நினைத்து அருவருப்பாக உணர்கிறேன்” என அவர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் அனுராக் காஷ்யப் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “என்னுடைய தயாரிப்பாளர் லாபத்தின் அளவுகோலில் குறியாக இருக்கும்போது, அதிக பொருட்செலவிலான பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வது எனக்கு கடினமாக இருக்கிறது. படம் தொடங்கும் முன்பே அதனை எப்படி வியாபாரம் செய்வது என்பது குறித்து யோசிக்கிறார்கள்.

அதனால் திரைப்படங்களை இயக்குவதில் இருக்கும் மகிழ்ச்சி பாதிக்கப்படுகிறது. அதனால் நான் மும்பையிலிருந்து வெளியேறலாம் என முடிவு செய்திருக்கிறேன். தென்னிந்தியாவுக்கு செல்ல இருக்கிறேன். எங்கே எனக்கு உத்வேகம் எங்கு கிடைக்குமோ அங்கு செல்ல உள்ளேன்.

பாலிவுட் திரையுலகில் நான் ஏமாற்றம் அடைந்திருக்கிறேன். அத்துடன் அருவருப்பாகவும் உணர்கிறேன். அவர்களின் மனநிலையே எனக்கு அருவருப்பாக உள்ளது. இங்கே யாரும் நடிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. மாறாக நட்சத்திரங்களாக மாறவே முனைகின்றனர்” என்று கடுமையாக சாடியுள்ளார்.



Source link