Last Updated:

AR Rahman | அனிருத் மிக நன்றாக இசையமைக்கிறார். முன்பு 10 இசையமைப்பாளர்கள் என்றால், இன்று 10 ஆயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கின்றனர்.

News18

“அனிருத் சிறப்பாக இசையமைக்கிறார். அவர் கிளாசிக் இசையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்” என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவுரை வழங்கியுள்ளார்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “அனிருத் மிக நன்றாக இசையமைக்கிறார். முன்பு 10 இசையமைப்பாளர்கள் என்றால், இன்று 10 ஆயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் போட்டிப்போட்டு நிலைத்து நிற்கிறார் என்றால், திறமையில்லாமல் சாத்தியப்படாது. அனிருத்துக்கு ஒரு அறிவுரையை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

என்னவென்றால், கிளாசிக்கல் இசையை அதிகமாக பயன்படுத்தி பாடல்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் நீண்ட காலத்துக்கு நிலைத்து இருக்க முடியும். மேலும் அப்படி செய்தால் அந்த இசை இளம் தலைமுறைக்கு சென்று சேரும்” என்றார்.





Source link