இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இது கண்ணுக்குத் தெரியாத முடிவு என
ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.

திருமணமாகி 29 வருடங்கள் ஆன பிறகு விவாகரத்து செய்வதால் இந்த முடிவு ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தை தாண்டி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.

Also Read: 
AR Rahman | “அவரவர் விருப்பம் போல வாழ…” – ஏ.ஆர்.ரகுமான் திருமண முறிவு குறித்து பார்த்திபன் சொன்ன கருத்து!

சுமார் 3 தசாப்தமாக திரையுலகில் ஏ.ஆர்.ரகுமான் வெற்றி பயணத்தை தொடர அவரது மனைவியும் மிக முக்கிய காரணமாக இருந்ததாக பல நேர்காணல்களில் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.

விளம்பரம்

யார் இந்த சாய்ரா பானு?

12 மார்ச் 1995இல் சாய்ரா பானுவை மணந்தார் ஏ.ஆர்.ரகுமான். இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டதே சற்று சுவாரஸ்யம் நிறைத்தது. கடந்த 1992-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ திரைப்படம் தான் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல் படம். முதல் படத்திலேயே வித்தியாசமான இசையை கொடுத்து ஒரு இசை புரட்சியையே ஏற்படுத்தியிருந்தார். இதனால் அவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அதேநேரம் திருமணத்துக்கு பெண்களும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்படி, ஏ.ஆர்.ரகுமானால் மணப்பெண்களைப் பார்க்க நேரமில்லாததால் பெற்றோர்களால் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. சாய்ராவை முதலில் சந்தித்தது ஏ.ஆர்.ரகுமானின் தாயும், சகோதரியும் எனக் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள சூஃபி துறவியான மோதி பாபாவின் கோயிலில் வைத்து தான் சாய்ராவை முதலில் சந்தித்து உள்ளனர். கோவிலுக்கு அருகில் தான் சாய்ராவின் வீடு. அதனால் இருவரும் நேராக சென்று சாய்ராவுடனும், குடும்பத்தினருடனும் பேசியுள்ளனர். இதன்பின் அனைத்தும் இயல்பாக நடந்துள்ளது.

விளம்பரம்

சாய்ரா, குஜராத்தி குடும்பத்தை சேர்ந்தவர். வட இந்திய கலாச்சாரத்தை நன்கு அறிந்தவர். அதோடு நடிகர் ரகுமானுக்கு உறவினரும்கூட. தனது தாய் அறிமுகம் செய்ததை அடுத்து, 1995-ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி தனது 28ஆவது பிறந்த நாளன்று சாய்ரா பானுவை முதல்முறையாக சந்தித்தார் ஏ.ஆர்.ரகுமான். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் அதே ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

Also Read: 
AR Rahman Divorce: கண்ணுக்குத் தெரியாத முடிவாக..! – திருமண முறிவு குறித்து ஏ.ஆர். ரகுமான்

News18

சாய்ராவுடனான தனது முதல் சந்திப்பை ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்த ஏ.ஆர்.ரகுமான், “சாய்ரா, அழகாகவும் அதேநேரம் அமைதியாகவும் இருந்தார். எனது 28வது பிறந்த நாள் அன்று நாங்கள் முதல் முறையாக சந்தித்தோம். அது ஒரு சிறிய சந்திப்பு, அதன் பிறகு, நாங்கள் பெரும்பாலும் தொலைபேசியில் தான் பேசிக்கொண்டோம்.

விளம்பரம்

சாய்ராவுக்கு அப்போது கட்ச் மொழியும், ஆங்கிலம் மட்டுமே தெரிந்திருந்தது. அதனால், என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா என்று ஆங்கிலத்தில் சாய்ராவிடம் கேட்டேன். அப்போது, ​​அவர் மிகவும் அமைதியாக இருந்தார்” என்று தெரிவித்திருந்தார்.

குஜராத்தின் கட்ச் நகரில் டிசம்பர் 20, 1973இல் சாய்ரா பானு பிறந்தார். அவரின் குடும்பம் அப்போதே சற்று வசதியாக இருந்த குடும்பம். எனினும், கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் ஆழமாக வேரூன்றிய அவரது குடும்பம், சாய்ராவையும் அப்படியே வளர்த்தது.

இது பின்னாளில் வாழ்க்கை பற்றிய சாய்ராவின் கண்ணோட்டத்தையும் மாற்றியது. இதனால் சமூக தொண்டு பணிகளில் தீவிரமாக பணியாற்றினார். ஏ.ஆர்.ரகுமானின் தொண்டு முயற்சிகளுக்கு சாய்ரா மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்.

விளம்பரம்

Also Read: 
ஆடம்பர பங்களா முதல் கார்கள் வரை… இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஏ.ஆர். ரகுமான் – சாய்ரா தம்பதியர் வெளியுலகிற்கு அரிதாகவே தங்களை வெளிக்காட்டிக் கொண்டவர்கள். அந்த நேரங்களிலும் தங்களுக்குள்ளான காதலை மிகவும் கண்ணியமாக வெளிப்படுத்த தவறியதில்லை. இதனை பல நிகழ்ச்சிகளிலும், வீடியோக்கள் மூலமாக பார்க்கலாம். அதனை பார்த்த ரசிகர்களுக்கு, இந்த பிரிவு செய்தி மிகுந்த கவலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மூன்று தசாப்த கால திருமண வாழ்க்கையை நிறைவு செய்யவிருந்த நிலையில், 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

.



Source link