Last Updated:

நீண்ட நேரம் களத்தில் இருந்த விராட் கோலி 17 ரன்களில் வெளியேறினார். பந்த் 40 ரன்களில் வெளியேறிய நிலையில், நிதிஷ்குமார் ரெட்டி டக் அவுட் ஆனார். 

News18

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தடுமாறி வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி 2 – 1 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், சிட்னி நகரில் 5-வது மற்றும் இறுதிப் போட்டி இன்று தொடங்கியது. தொடர் முழுவதும் மோசமாக விளையாடி வரும் கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதில் பும்ரா இந்திய அணியை வழிநடத்துகிறார்.

இந்நிலையில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், கே.எல்.ராகுல் 4 ரன்களிலும் வெளியேறினர். ரோஹித் சர்மாவுக்கு பதில் களம் இறங்கிய கில் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நீண்ட நேரம் களத்தில் இருந்த விராட் கோலி 17 ரன்களில் வெளியேறினார். பந்த் 40 ரன்களில் வெளியேறிய நிலையில், நிதிஷ்குமார் ரெட்டி டக் அவுட் ஆனார்.

Also Read | Rohit Sharma: ‘எங்கள் கேப்டன்’… ரோஹித் சர்மா பற்றி டாஸில் பும்ரா என்ன சொன்னார்?

ஃபயர் மோடில் பும்ரா

இறுதியில் கேப்டன் பும்ரா சற்று நேரம் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். ஆஸ்திரேலிய பவுலர்களின் பந்துவீச்சை எந்தவித பதற்றமும் இல்லாமல் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் என விளாசி 22 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் கம்மின்ஸ் பந்தில் பும்ரா விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இன்னும் 17 ஓவர்கள் மீதம் உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி பேட் செய்யவுள்ளது.



Source link