Last Updated:

Ind vs Aus | அணியை மீட்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 28 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

News18

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்களில் சுருண்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் குவித்தது. 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 5 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

அணியை மீட்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 28 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். சற்று தாக்குப்பிடித்து அதிரடியாக விளையாடிய நிதிஷ் குமார், 42 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் இந்திய அணி 175 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது.

இதையடுத்து 19 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி நான்காவது ஓவரில் இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. மேலும் இந்த போட்டியில் தோல்வியடைந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் வரும் 14ஆம் தேதி தொடங்குகிறது.



Source link