ஐயப்பசுவாமி சீசனையொட்டி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள துணிக்கடைகள்; மழை வெள்ள பாதிப்பால் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களாக பக்தர்கள் அதிகம் வருவதால் வியாபாரம் நன்றாக இருப்பதாக கூறினர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே 300-க்கும் அதிகமான துணிக்கடைகள் நகராட்சி அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ளது.
20 வருடங்களுக்கு மேலாக ஐயப்பசுவாமி சீசன் காலங்களான கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரையில் துணிக்கடைகள் அமைக்கப்படுகிறது.
Also Read:
மேஷம் முதல் மீனம் வரை… இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்.? டிசம்பர் 13, 2024
இங்கு கிடைக்கும் ஆடைகள், ஸ்வெட்டர், ரெயின்கோட், கம்பளி போர்வை ஆகியவை டெல்லியில் உள்ள லுதியானா மற்றும் பிற வட மாநிலங்களில், தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர், ஈரோடு போன்ற இடங்களில் இருந்து இறக்குமதி செய்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்து கடைகள் அமைத்து விற்பனை செய்கின்றனர். மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால் சபரிமலைக்கு சென்று விட்டு ராமநாதசுவாமியை வழிபட வரும் ஐயப்ப பக்தர்கள் இங்கு சென்று தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்திற்கு துணிகளை வாங்கி செல்கின்றனர். மேலும், உள்ளூர் பொதுமக்களும் இங்கு வாடிக்கையாளராக உள்ளனர்.
தற்போது, கடைகள் அமைத்து ஒரு மாத காலம் கடந்தும் வியாபாரம் இன்றி இருப்பதாக தெரிவித்தனர். தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பாதிப்பு தொடர்ந்து ஏற்படுவதால் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையிலும் வியாபாரம் இல்லை. இரண்டு நாட்களாக ஐயப்ப பக்தர்கள் அதிகமாக வரத்தொடங்கி உள்ளனர். தற்போது மழை இல்லாமல் வெயில் அடித்து சீரான நிலை ஏற்பட்டுள்ளதால் வியாபாரம் பரவாயில்லை, வரக்கூடிய நாட்களில் வியாபாரிகள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தனர்.
.