Last Updated:
Baby John | அட்லீ இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘தெறி’ படத்தின் ரீமேக்காக பாலிவுட்டில் வெளியாகி நஷ்டத்தை சந்தித்துள்ளது ‘பேபி ஜான்’. இந்தப் படம் ரீமேக் என்பதால் பாக்ஸ் ஆஃபீஸில் பின்னடைவை சந்தித்தது என அப்படத்தில் நடித்த நடிகர் ராஜ்பால் தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘தெறி’ படத்தின் ரீமேக்காக பாலிவுட்டில் வெளியாகி நஷ்டத்தை சந்தித்துள்ளது ‘பேபி ஜான்’. இந்தப் படம் ரீமேக் என்பதால் பாக்ஸ் ஆஃபீஸில் பின்னடைவை சந்தித்தது என அப்படத்தில் நடித்த நடிகர் ராஜ்பால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “ஒருவேளை பார்வையாளர்கள் ‘தெறி’ படத்தை பார்க்காமல் இருந்திருந்தால் ‘பேபி ஜான்’ வரவேற்பை பெற்றிருக்கும். அதேபோல, இது ரீமேக் படமாக இல்லாமல் ஒரிஜினல் கதையாக இருந்திருந்தால், எனது 25 வருட சினிமா வாழ்க்கையில் இதுவே சிறந்த படமாக அமைந்திருக்கும்.
இதையும் வாசிக்க: Nagarjuna | ஜிம்முக்கு போவதில்லை…டயட் இல்லை, ஆனாலும்… – 65 வயதில் நாகர்ஜுனாவின் ஃபிட்னஸ் மந்திரம் என்ன?
ஏற்கனவே விஜய் இந்தப் படத்தில் நடித்து அடையாளத்தை உருவாக்கியதாலும், இது ரீமேக் என்பதாலும், படம் பாக்ஸ் ஆஃபீஸில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது” என்றார். படத்தின் தோல்வியால் வருண் தவான் மன அழுத்தத்தில், அதிருப்தியில் உள்ளாரா? என கேட்டதற்கு, “வருண் மிகவும் இனிமையானவர்.
கடின உழைப்பாளி. எப்போதும் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பவர். அவரது முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை. ரிஸ்க் எடுப்பது பெரிய விஷயம்” என்றார். ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம் வெறும் ரூ.50 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
January 09, 2025 9:04 AM IST