Last Updated:

Baby John | ‘பேபி ஜான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

News18

அட்லீ தயாரிப்பில் பாலிவுட்டில் வெளியான ‘பேபி ஜான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அதன் மொத்த வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் உருவான படம் ‘தெறி’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸிலும் வசூலைக் குவித்தது. இதையடுத்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்திருக்கிறார் அட்லீ.

Also Read: நடிகர் அல்லு அர்ஜுனின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா? அவரே பகிர்ந்த தகவல்…

அவர் தயாரித்துள்ள இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘பேபி ஜான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் பெரிய அளவில் பாக்ஸ் ஆஃபீஸில் வரவேற்பைப் பெறவில்லை.

இதனால் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான படம் உலக அளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை மட்டுமே ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அட்லீக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.



Source link