Last Updated:
Bala Explain | பெண் பிள்ளைகளை யாராவது அடிப்பார்களா?. என்ன நடந்தது என்றால், மும்பையில் இருந்து வந்த மேக்கப் ஆட்கள் இவருக்கு மேக்கப் போட்டு விட்டார்கள். என்னைப் பொறுத்தவரை மேக்கப் போட்டு நடித்தால் பிடிக்காது.
பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் நடிக்க தொடக்கத்தில் ஒப்பந்தமானாவர் மமிதா பைஜு. பின்பு அவர் படத்திலிருந்து விலகினார். இது தொடர்பான நேர்காணலில் பேசிய அவர், பாலா தன்னை தாக்கியதாக தெரிவித்திருந்தார். பின்பு அப்படி இல்லை எனவும் மறுப்பு கூறினார். இது தொடர்பாக இயக்குநர் பாலா விளக்கம் அளித்திருந்தார்.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம் வரும் ஜனவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் புரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மமிதா பைஜுவை தாக்கியது தொடர்பான கேள்விக்கு சமீபத்திய பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார் இயக்குநர் பாலா. அவர் கூறுகையில், “மமிதா பைஜு என் மகளைப் போன்றவர். அவரை நான் எப்படி அடிக்கத் துணிவேன்.
இதையும் படிக்க: இன்னும் முடிவுக்கு வராத மோதல்? – விக்ரம் பற்றிய கேள்வி… இயக்குநர் பாலா கொடுத்த பதில்!
தவிர்த்து, பெண் பிள்ளைகளை யாராவது அடிப்பார்களா?. என்ன நடந்தது என்றால், மும்பையில் இருந்து வந்த மேக்கப் ஆட்கள் இவருக்கு மேக்கப் போட்டு விட்டார்கள். என்னைப் பொறுத்தவரை மேக்கப் போட்டு நடித்தால் பிடிக்காது. இது அவர்களுக்குத் தெரியாது. மமிதா பைஜுவும் இதை அவர்களிடம் சொல்லவில்லை. படப்பிடிப்பு தொடங்கியும், மேக்கப் போட்டு வந்தவரை பார்த்து யார் மேக்கப் போட்டது என கேட்டு கை ஓங்கினேன். அடிக்கவில்லை. இதுதான் நடந்தது. உடனே அடித்துவிட்டேன் என்று செய்து வெளியாகிவிட்டது” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக மமிதா பைஜு அளித்த பேட்டி ஒன்றில், “பாலா என்னை அடிக்கவில்லை, என்னை நேர்காணல் எடுத்தவர்கள் தவறாக சித்தரித்திருக்கிறார்கள். ‘வணங்கான்’ படப்பிடிப்பில் மன ரீதியாக, உடல் ரீதியாக எந்த தொந்தரவும் ஏற்படவில்லை” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
December 31, 2024 5:25 PM IST