Last Updated:
Big Boss 8 | பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவர் வெல்லும் பரிசு தொகை பணம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவர் வெல்லும் பரிசு தொகை பணம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கியது. இம்முறை நிகழ்ச்சியை கமலுக்கு பதில் விஜய் சேதுபதி நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 24 போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஒவ்வொருவராக வெளியேறி தற்போது 5 போட்டியாளர்கள் இறுதிக்கட்டத்துக்கு முன்னேறியுள்ளனர். அதில் யார் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஷால், ரயான், முத்துக்குமரன், பவித்ரா, சௌந்தர்யா ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
இதையும் வாசிக்க: Madha Gaja Raja | மசாலா… கமர்ஷியல் எல்லாம் ஓகே.. ஆனால் ‘மதகஜராஜா’வில் இந்த வக்கிரம் தேவையா?
யார் ஜெயிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான கிராண்ட் பினாலே நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு கோப்பையுடன் ரூ.40 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
January 18, 2025 7:00 PM IST