Last Updated:
கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த தமிழ் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட முத்துக்குமரனின் பேச்சு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த தமிழ் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட முத்துக்குமரனின் பேச்சு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
பிக்பாஸ் சீசன் 8-ல் நேற்றைய கிராண்ட் பினாலே நிகழ்வில் சௌந்தர்யா, முத்துக்குமரன் இருவரும் அருகருகே நின்றுகொண்டிருக்க முத்துக்குமரனின் கையை உயர்த்தி பிடித்து வெற்றியை டைட்டில் வின்னரை அறிவித்தார் விஜய்சேதுபதி.
இதையடுத்து மேடையில் நெகிழ்ச்சியுடன் பேசிய முத்துக்குமரன், “இந்த கோப்பை எங்களின் 24 பேருக்கானது. என்னோட வெற்றியில்லை இது. எந்த ஏழ்மையிலும், வறுமையிலும், எந்த இருட்டான சூழல்நிலையிலும், தன்னம்பிக்கையையும், தன்மானத்தையும் விட்டுக்கொடுக்காத ஒரு பெண்ணின் வெற்றி.
அந்த பெண் என் அம்மா. அவர் எனக்கு சொல்லிக்கொடுத்தது தமிழ். மற்றொன்று உழைப்பு. யாராவது என்னால் இது முடியாது என்று கூறினால், முத்துக்குமரானாலே முடிந்தது உன்னால் ஏன் முடியாது என சொல்லுங்கள்.
என்னை பாராட்டி, விமர்சனம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார். மேலும் பரிசுத்தொகையை கொண்டு கடன் இல்லாமல் வீடு கட்டுவேன் என்றும், சமூகத்திற்காக இந்தப் பணத்தை செலவு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
January 20, 2025 7:54 AM IST