Last Updated:

Billa | பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி ஹிட்டான ரஜினியின் ‘பில்லா’ தோல்வியடைந்த படம் என இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியதால் சர்ச்சை வெடித்துள்ளது.

News18

பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி ஹிட்டான ரஜினியின் ‘பில்லா’ தோல்வியடைந்த படம் என இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியதால் சர்ச்சை வெடித்துள்ளது.

மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’ திரைப்படம் நாளை (ஜன.14) வெளியாகவுள்ளது.அதற்கான விளம்பர நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணுவர்தன், அஜித்தை வைத்து தான் இயக்கிய ‘பில்லா’ படத்தை நினைவுகூர்ந்தார்.

அப்போது, ரஜினி நடித்த பில்லா படம் சரியாக ஓடவில்லை எனவும், இந்த படத்தையா ரீமேக் செய்யப்போகிறோம் என தனக்கு தோன்றியதாகவும் கூறினார். விஷ்ணுவர்தனின் இந்த கருத்தால், கொதித்தெழுந்த ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்க: Ajith | கார் ரேஸில் வெற்றியுடன் திரும்பிய அஜித்தை வரவேற்ற ஷாலினி… லைக்ஸை அள்ளும் வீடியோ!

ரஜினி நடித்த ‘பில்லா’ படம் வெள்ளி விழா கண்ட வெற்றிப் படம் எனவும், இதை அந்த படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் பாலாஜியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் எனவும் பதிவிட்டுள்ளனர். விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘பில்லா’ திரைப்படம் 2007-ம் ஆண்டு வெளியானது. இதன் இரண்டாம் பாகம் 2012-ல் வெளியானது குறிப்பிடத்தக்கது.





Source link