500-க்கும் மேற்பட்ட நேரடி சேனல்களுடன் பிஎஸ்என்எல் புதிய சேவையை வழங்குகிறது. இதுதொடர்பான முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL), தனது வாடிக்கையாளர்களுக்காக நாட்டின் முதல் ஃபைபர் அடிப்படையிலான இன்ட்ராநெட் டிவி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சேவையின் கீழ், BSNL அதன் வாடிக்கையாளர்களுக்கு 500க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் Pay TV உள்ளடக்கத்தை உயர் தரத்தில் வழங்குகிறது. இது பொழுதுபோக்கிற்கான புதிய பாதையை வழங்குவது மட்டுமல்லாமல், இணையச் செலவுகளையும் குறைக்கும். மேலும் சமீபத்தில், நிறுவனத்தின் புதிய லோகோ மற்றும் 6 புதிய சேவைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சேவைகளில் முக்கியமானது ஃபைபர் அடிப்படையிலான இன்ட்ராநெட் டிவி சேவையாகும். இது IFTV (இன்டர்நெட் ஃபைபர் டிவி) என்று பெயரிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதனுடன், பிஎஸ்என்எல் ‘நேஷனல் Wi-Fi ரோமிங் சர்வீஸ்’ என்ற மற்றொரு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் ஹாட்ஸ்பாட்களில் ஹை ஸ்பீட் இன்டர்நெட் அக்சஸ்-ஐ பெறலாம். இது அவர்களின் டேட்டா செலவை குறைக்கும். இந்த சேவையை பிஎஸ்என்எல் தற்போது மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Also Read:
5000 ரூ தொடங்கிய பிசினஸ் இன்று 17 கோடி.. பல தோல்விகளை சந்திந்த ‘உஜாலா’ நிறுவனம் சாதித்தது எப்படி?

விளம்பரம்

இந்த சேவையின் கீழ் வாடிக்கையாளர்கள் 500க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை அனுபவிக்க முடியும். இது தவிர, பிஎஸ்என்எல்-இன் IFTV சேவையின் கீழ், டிவி ஸ்ட்ரீமிங்கிற்குப் பயன்படுத்தப்படும் டேட்டாவானது யூசரின் டேட்டா பேக்கில் இருந்து கழிக்கப்படாது. மாறாக, IFTV சேவையானது அன்லிமிடெட் டேட்டாவுடன் வழங்கப்படுகிறது. இந்த வசதி பிஎஸ்என்எல் FTTH வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் ஏதுமின்றி வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல்-ன் இந்த புதிய சேவை நேரடி சேனல்களுக்கு மட்டும் அல்ல. அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், யூடியூப் மற்றும் ஜீ5 போன்ற முக்கிய OTT தளங்களும் இந்த சேவையில் சேர்க்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இது தவிர, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு கேமிங் வசதியும் கிடைக்கும். இருப்பினும், இந்த சேவை தற்போது ஆண்ட்ராய்டு டிவியில் மட்டுமே வேலை செய்யும். ஆண்ட்ராய்டு 10 அல்லது அதற்கு மேல் வைத்துள்ள வாடிக்கையாளர்கள், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பிஎஸ்என்எல் லைவ் டிவி ஆப்பை டவுன்லோட் செய்து இந்த சேவையை பெறலாம். பிஎஸ்என்எல்லின் இந்த நடவடிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இன்டர்நெட் ப்ரோடோகால் டெலிவிஷன் (IPTV) சேவையின் விரிவாக்கமாகும்.

உடலில் புரோட்டீன் குறைபாட்டின் 8 பொதுவான அறிகுறிகள்.!


உடலில் புரோட்டீன் குறைபாட்டின் 8 பொதுவான அறிகுறிகள்.!

இந்த புதிய IFTV சேவையின் மூலம் பிஎஸ்என்எல் டிஜிட்டல் பொழுதுபோக்கு உலகில் குறிப்பிடத்தக்க இடத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் மலிவு மற்றும் நம்பகமான விருப்பத்தை வழங்குகிறது. இந்த சேவை BSNL வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. அங்கு அவர்கள் தங்களுக்கு பிடித்த கன்டென்ட்-ஐ பார்க்க டேட்டா கட்டணங்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

விளம்பரம்

.



Source link