Last Updated:

சமீபத்தில் வெளியான அறிக்கையின் படி, மிடில் கிளாஸில் இருப்பவர்களுக்கு அதாவது ஒரு ஆண்டுக்கு 15 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு வரி நிவாரணம் வழங்குவதை அரசு கருத்தில் எடுத்துக் கொண்டு உள்ளது.

News18

ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் மாத வருமானம் பெறும் வரி செலுத்துவோர் வருமான வரியில் தங்களுக்கு சாதகமாக ஏதேனும் நிவாரணம் கிடைக்குமா என்பதை எதிர் நோக்குவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இது அவர்களுடைய பொருளாதார சுமையை ஓரளவுக்கு குறைப்பதற்கு உதவும். சமீபத்தில் வெளியான அறிக்கையின் படி, மிடில் கிளாஸில் இருப்பவர்களுக்கு அதாவது ஒரு ஆண்டுக்கு 15 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு வரி நிவாரணம் வழங்குவதை அரசு கருத்தில் எடுத்துக் கொண்டு உள்ளது.

வருமான வரிகள் பற்றிய புகார்கள்: நகரங்களில் வாழும் மக்கள் நீண்ட காலங்களாகவே அதிகரித்து வரும் விலைவாசிகள் மற்றும் அதிக வரிகள் பற்றிய கவலைகளை தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே அரசு ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பலர் தீவிரமாக நம்புகின்றனர். 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய வரி விதிப்பு முறையின்படி, 3 லட்சம் முதல் 15 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறக்கூடிய நபர்கள் 5 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும் என்று விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 15 லட்ச ரூபாயை விட அதிகமாக ஆண்டு வருமானம் பெறுபவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரி 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இரண்டு வரி விதிப்பு முறைகள்: தற்போதைய சூழ்நிலையில் ஒருவருடைய வருமானத்தின் அடிப்படையில் இரண்டு வகையான வரி விதிப்பு முறைகளை தேர்வு செய்யும் அனுமதி இந்தியாவில் உள்ள வரி செலுத்துவோருக்கு வழங்கப்படுகிறது. முதலில் உள்ளது பழைய வரி விதிப்பு முறை. இதில் வீட்டு வாடகை மற்றும் இன்சூரன்ஸ் போன்றவற்றிற்கு நீங்கள் எக்ஸம்ப்ஷன்கள் பெற்றுக் கொள்ளலாம். இரண்டாவது ஆப்ஷன் என்பது புதிய வரி விதிப்பு முறை. இது வரி விகிதத்தை குறைத்தாலும் பெரும்பாலான எக்ஸ்சம்ஷன்களை இந்த வரி விதிப்பு முறை நீக்கி உள்ளது. உங்களுடைய பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில் சிறந்த ஒரு ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

வரும் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கான அறிவிப்பை வருகிற பிப்ரவரி 1, 2025 இல் வெளியாக இருக்கும் பட்ஜெட்டின் போது அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம். வருமான வரியில் குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கி பொருளாதாரத்தை ஊக்குவித்து மக்களை இன்னும் அதிக அளவு செலவு செய்வதற்கு ஊக்குவிப்பதற்காகவே அரசு இத்தகைய முடிவை எடுத்து உள்ளது. அரசு இந்த மாதிரியான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டால் எதிர்காலத்தில் பணவீக்கத்தை சமாளிப்பது மிகவும் எளிமையான காரியமாக இருக்கும்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

Budget 2025 | வருமான வரியில் இருந்து மிடில் க்ளாஸ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா.. எதிர்பார்ப்புகள் என்ன?



Source link