Last Updated:
பிசினஸ் லோன் வாங்குவதற்கான எலிஜிபிலிட்டி, கிரெடிட் ஸ்கோர் மற்றும் டிஸ்கவுண்டுகள் போன்றவற்றை பற்றி பார்க்கலாம்.
இந்தியாவில் பிசினஸ் லோன் என்பது புதிதாக ஒரு தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள், தொழிலை விரிவு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு அற்புதமான பொருளாதார கருவியாக அமைகிறது. வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் இதற்கான பல்வேறு ஆப்ஷன்களை வழங்குகிறது. இந்த செயல்முறையை புரிந்து கொள்வது உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப சரியான லோனை தேர்வு செய்வதற்கு உதவும். எனவே இந்த பதிவில் பிசினஸ் லோன் வாங்குவதற்கான எலிஜிபிலிட்டி, கிரெடிட் ஸ்கோர் மற்றும் டிஸ்கவுண்டுகள் போன்றவற்றை பற்றி பார்க்கலாம்.
பிசினஸ் லோன் என்றால் என்ன?:
ஒரு பிசினஸ் லோன் என்பது தொழில் தொடர்பான செலவுகளுக்காக வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) மற்றும் அரசு திட்டங்கள் வழங்கும் ஒரு பொருளாதாரப் பிராடக்ட். இதில் தொழில் செய்வதற்கான முதலீடு, உபகரணங்களை வாங்குவது, விரிவாக்கம் போன்றவை அடங்கும்.
இந்தியாவில் உள்ள பிசினஸ் லோன்களின் வகைகள்:
- டேர்ம் லோன்: நிலையான சொத்துக்கள் அல்லது நீண்ட கால முதலீடுகளுக்கு
- வொர்கிங் கேப்பிட்டல் லோன்: தினசரி செயல்பாட்டு செலவுகளுக்கு
- உபகரணங்களுக்கான கடன்: தொழிலுக்கு தேவையான இயந்திரங்கள் அல்லது தொழில்நுட்பத்தை வாங்குவதற்கு
- ஓவர் டிராஃப்ட் வசதி: குறுகிய கால தேவைகளுக்கான கடன்
- ஸ்டார்ட்-அப் கடன்கள்: புதிய தொழில்களுக்கான ஸ்பெஷல் லோன்கள்
- அரசு திட்டங்கள்: மூத்ரா யோஜனா, ஸ்டாண்ட் அப் இந்தியா மற்றும் CGTMSE போன்றவற்றின் கீழ் வழங்கப்படும் கடன்கள்.
பிசினஸ் லோன்களுக்கான தகுதி வரம்புகள்:
- வயது 21 முதல் 65 வருடங்கள் இருக்க வேண்டும்.
- தொழில் ஆரம்பித்து குறைந்தபட்சம் 2 முதல் 3 வருடங்கள் ஆகியிருக்க வேண்டும்.
- ஒரு வருடத்திற்கான டேர்ன் ஓவர் 10 முதல் 15 லட்சம் மேல் இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 2 வருடங்களுக்காவது நிலையான பொருளாதார செயல்திறனை கொண்டிருக்க வேண்டும்.
- ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பொறுத்தவரை, சிறந்த வருவாய் ஈட்டி தரக்கூடிய நல்ல வலுவான தொழில் திட்டத்தை கொண்டிருக்க வேண்டும். சில சூழ்நிலைகளில் அடைமானம் தேவைப்படும். அதே துறையில் அனுபவம் பெற்றிருப்பதும் அவசியம்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?:
- பிசினஸ் லோனுக்கு தேவையான டாக்குமென்ட்கள் அடையாள சான்றிதழ்: ஆதார் அட்டை, PAN கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அட்டை
- முகவரி சான்றிதழ்: யுட்டிலிட்டி பில்கள், வாடகை ஒப்பந்த பத்திரங்கள் அல்லது தொழில் அமைந்திருக்கும் முகவரிக்கான சான்றிதழ்
- பொருளாதார டாக்குமென்ட்கள்: கடந்த 2 முதல் 3 ஆண்டுகளுக்கான இன்கம் டேக்ஸ் ரிட்டன், 6 முதல் 12 மாதங்களுக்கான பேங்க் ஸ்டேட்மென்ட்கள், பிராஃபிட் மற்றும் லாஸ் ஸ்டேட்மென்ட்கள், பேலன்ஸ் ஷீட்டுகள்
- தொழில் நிரூபணம்: GST பதிவு, வர்த்தகம் செய்வதற்கான உரிமம்
- கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடன் அங்கீகரிக்கப்படுவதில் அதன் தாக்கம்
- 750 க்கும் மேற்பட்ட கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு உடனடியாக பிசினஸ் லோன் வழங்கப்படும்.
- 650 முதல் 749 வரையிலான கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு அதிக வட்டி விகிதங்களில் கடன் வழங்கப்படும். *650-க்கும் குறைவான கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு அடைமானம் அல்லது கேரண்டி தேவைப்படும்.
வட்டி விகிதங்கள் எவ்வளவு?:
- வங்கிகள்: ஒரு ஆண்டுக்கு 8 முதல் 15%
- NBFC: ஒரு ஆண்டுக்கு 12 முதல் 24%
- அரசு திட்டங்கள்: மூத்ரா யோஜனாவின் கீழ் 7.35%
இந்தியாவில் பிசினஸ் லோனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?:
- முதலில் தகுதி வரம்புகள், வட்டி விகிதங்கள் மற்றும் விதிகளின் அடிப்படையில் பல்வேறு கடன் வழங்குனர்களை ஒப்பிட்டு பாருங்கள்.
- உங்களுக்கு கடன் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை தெரிந்து கொள்வதற்கு ஆன்லைன் எலிஜிபிலிட்டி கால்குலேட்டர்களை பயன்படுத்தவும். *தேவையான அனைத்து டாக்குமெண்ட்களையும் தயார் நிலையில் வையுங்கள்.
- கடன் வழங்குனரின் வெப்சைட்டிலோ அல்லது நேரில் சென்றோ, கடனுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும். வெரிஃபிகேஷனுக்கு பிறகு உங்களுக்கான கடன் அங்கீகரிக்கப்பட்டு, கடன் தொகை உங்களுடைய அக்கவுண்டில் கிரெடிட் செய்யப்படும்.
January 13, 2025 6:47 PM IST