மீன்வரத்து இல்லாமல் நஷ்டத்துடன் மீன்பிடி தொழில் செய்யும் நிலையில், மீனவர்களுக்கான மாற்றுத்தொழிலாக அரசு மானியத்தை பயன்படுத்தி கூண்டு மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருடத்திற்கு நல்ல லாபம் பார்த்து வரும் மண்டபம் முனைக்காடு மீனவர்கள்.

கூண்டு மீன் வளர்ப்பு என்பது மீனவர்களின் மாற்று தொழிலாக மாறி வருகிறது. பிரதம மந்திரி மேம்பாடு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீனவர்கள் வாழும் கடற்கரை கிராமங்களிலேயே மிதவை கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்க ஆண்களுக்கு 40% மானியமும், பெண்களுக்கு 60% மானியத்தில் மீன்களை வழங்கி வருகின்றனர்.

விளம்பரம்

இதன் மூலம் பயனடையும் வகையில் மண்டபம் முகாம் முனைக்காடு பகுதியில் கடந்த 15 வருடங்களாக கடல்பாசி வளர்ப்பில் ஈடுபட்ட அஜ்மல்கான் என்ற மீனவர்கள் சில வருடங்களாக கூண்டு மீன் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவரைப் பார்த்து அப்பகுதியில் பலரும் இந்த முயற்சியில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர். மீன்வளத்துறையின் சார்பில் 10 செ.மீ அளவிற்கு கொடுவா, சிங்கி, கோபியா போன்ற மீன்கள் வழங்கப்படுகிறது. இதற்கு 10 மாதங்கள் தினமும் காலை, மாலை என 40 கிலோ மீன்களை உணவாக அளிக்கப்படுகிறது. மீன் குஞ்சுகளாக இருக்கும் மூன்று மாதங்கள் கூடுதல் கவனம் செலுத்தி, அவ்வப்போது கூண்டுகளில் உள்ள வலைகளை மாற்றிப் பராமரிக்கப்படுகிறது.

விளம்பரம்

10 மாதங்களில் வளர்ச்சியடைந்த மீன் கிலோ ரூ.450 முதல் ரூ.500 வரையிலும் விற்பனையாகிறது. மீன்பிடி தொழிலால் வரும் எந்தவொரு இடையூறுகளும் இல்லாமல் கூண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் லாபம் கிடைக்கிறது.
கடல் சீற்றம் மற்றும் கடலில் தட்ப வெப்பநிலை மாற்றம் ஏற்படும்போது மீன்கள் அடிபட்டு பாதிப்பு ஏற்படும், அப்போது மீனுக்கு உணவு அளித்தால் மீன் உணவினைச் சாப்பிடாது. இதனை அறிந்து மீனைப் பிடித்து மண்டபத்தில் உள்ள CMFRI-யில் ஆய்வு செய்து ஒரு மணி நேரத்தில் அதற்கான பாதிப்புகளைக் கண்டறிந்து மருந்துகள் வழங்கப்படுகிறது.

விளம்பரம்

மருந்துகள் வழங்குவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி மீன்களுக்கு மருந்துகள் வழங்கிப் பராமரித்துப் பாதுகாத்துத் தொடர்ச்சியாக இந்தத் தொழிலை மேற்கொண்டு லாபம் பார்க்கிறோம், சிறிதும் கவனக்குறைச்சலாக இருந்தால் மீன்கள் மொத்தமும் அழிந்து விடும்” என்று கூறினார்.

முதல் முறை இந்தத் தொழில் செய்பவர்களுக்கு மட்டுமே மத்திய அரசின் மானியம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அரசின் மானியம் கிடைத்தால் இந்தத் தொழில் நல்ல வருமானம் பெற்று மீனவர்கள் பலரின் மாற்று தொழிலாக இருக்கும். மீன்வளத்துறை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.



Source link