Last Updated:
california wildfire: லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டு தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
2ஆவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்சில் கடந்த 7 ஆம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது. லாஸ் ஏஞ்சலஸ் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, ஹெலிகாப்டர்கள் வாயிலாக கடல் நீரில் தண்ணீர் இறைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதை தவிர மேலும் பலர் காணவில்லை எனக் கூறப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 40 ஆயிரம் ஏக்கரில் பரவிய நெருப்பு 12 ஆயிரத்து 300 கட்டடங்களை சின்னாபின்னமாக்கின. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ பரவி வரும் நிலையில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் 700 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, தெற்கு கலிஃபோர்னியாவில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என அங்குள்ள தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
January 14, 2025 4:06 PM IST