Category: இலங்கை

கடற்படையின் விரைவுப்படகு, பயணிகள் படகு மீது மோதியதில் 13 பேர் உயிரிழப்பு

மும்பையின் கடற்கரையில் நேற்று இந்திய கடற்படையின் விரைவுப்படகு கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எலிஃபெண்டா தீவுகளில் இருந்து 110 பயணிகளை இந்தியா கேட்வேக்கு ஏற்றிச் சென்ற வேகப் படகு,…

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும நலன்களைப் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கபெறாத ஆனால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்கு உள்ளான பிள்ளைகளுக்கு உரிய…

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷ்யா – Daily Ceylon

ரஷ்யாவில் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்று நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில், ‘ரஷ்ய விஞ்ஞானிகள்…

அதிவேக நெடுஞ்சாலையில் எதிர் திசையில் பயணித்த கார் – சாரதி கைது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிபென்ன சேவை நிலையத்திற்கு அருகில் கொழும்பு நோக்கி செல்லும் பாதையில் காலி நோக்கி காரை செலுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மனநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு நோக்கி பயணித்த போது, காரின் சாரதி கழிவறைக்குச் சென்ற…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு,…

அதிவேக வீதியில் வாகன விபத்து – இந்த வருடத்தில் 16 பேர் உயிரிழப்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கவனயீனமாகவும் சாரதி களைப்புடனும் வாகனம் செலுத்துகின்றமை இந்த விபத்துக்கள் இடம்பெற பிரதான காரணங்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ்…

கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் எண்ணிக்கையை அரசாங்கம் கூறியே ஆக வேண்டும்

கல்விச் சான்றிதழ்களை பரீட்சித்துப் பார்க்கும் பாராளுமன்றமாகச் செயற்படாமல், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் சபையாகச் செயற்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று…

16,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி

டிசம்பர் மாதம் 04ஆம் திகதி முதல் இன்று(18) வரையான காலப்பகுதியில் 16,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6,000 மெற்றிக் தொன் பச்சை அரிசி என்பதோடு, 10,000 மெற்றிக் தொன் நாட்டரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கத் திணைக்களத்தின்…

உகண்டாவில் உள்ள பணத்தை விரைவில் கொண்டுவருவோம்

ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் பெரிதளவில் பேசப்பட்ட உகண்டாவுக்கு கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படும் பணம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொடஹெச்சி கருத்து தெரிவித்துள்ளார். விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.…

பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு – தொகை மதிப்பீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வது தொடர்பான குறைநிரப்பு தொகை மதிப்பீடு இன்றையதினம் (18) வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான விவாதம் நேற்றும் இன்றும் இடம்பெற்றது. Source link