Category: இலங்கை

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் குறுக்காக மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

புத்தளம் – அநுராதபுரம் சிராம்பியடி பகுதியில் பிரதான வீதியின் குறுக்காக பாரிய மரமொன்று (27) முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மரம் சுமார் நூறு வருடங்கள் பழமை வாய்ந்த விசாலமான மரம் எனத் தெரிவிக்கப்படுகிறது.…

அநுராதபுரம் மாவட்டத்தில் 1962 குடும்பங்கள் இடம்பெயர்வு

அநுராதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச ஆகியோர் தலைமையில், பிரதான அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் (27) நடைபெற்றது. மேற்படி…

நிந்தவூர் மாட்டுப்பாளை பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட நிந்தவூர் மாட்டுப்பாளை பாலம் தற்காலிகமாக சீர்செய்யப்பட்டு போக்குவரத்துக்கள் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் இவ்வீதி ஊடான போக்குவரத்து நேற்று (28) முதல் இடம்பெற்று வருவதுடன், மறுஅறிவித்தல் வரும் வரை கனரக வாகனங்கள் இதனூடாக…

மொத்த உள்நாட்டு உற்பத்தி; இவ்வருடத்தில் 5 வீத வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும்

மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த வருடத்தில் 5 வீதமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அந்த வகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த வருடத்தில் 4.5 வீதம் முதல் 5 வீதம் வரை…

பிரதியமைச்சர் முனீர் முழப்பர் கடமைகள் பொறுப்பேற்பு

தேசிய ஒருமைப்பாடு (NATIONAL INTERGRATION) பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மொஹமட் முனீர் முழப்பர், ராஜகிரியவிலுள்ள நீதியமைச்சு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சில் நேற்று தனது பிரதியமைச்சு கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். சர்வமத தலைவர்களின் ஆசிர்வாத நிகழ்வுகளையடுத்து அவர் ஆவணத்தில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.…

நெடுந்தீவில் இருந்து ஹெலியில் கொண்டுவரப்பட்ட நோயாளிகள்

நெடுந்தீவில் இருந்து 03 நோயாளர்கள் ஹெலிகொப்டர் மூலம் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பணத்திற்கு கொண்டுவரப்பட்டனர். தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக நெடுந்தீவில் இருந்து இன்று (28) 03 நோயாளர்கள் விமானப் படையினரின் ஒத்துழைப்புடன் ஹெலிகொப்டர் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு,…

காரைதீவு விபத்து; மத்ரஸா அதிபர் உட்பட நால்வர் கைது

7 உயிர்களை காவு கொண்டுள்ள காரைதீவு மாவடிப்பள்ளி உழவு இயந்திர விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் மத்ரஸா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவர் என 4 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை சம்மாந்துறை…

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்பில் விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

– கால் நடைகள் மற்றும் விவசாய செய்கை பாதிப்பு குறித்தும் ஆராய்வு மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாகவும், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (28) மாலை மன்னார்…