Category: இலங்கை

ஏ 09 வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் ஏ-09 வீதியின் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு – யாழ்ப்பாணம் ஏ 09 வீதியில் ஓமந்தை பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.…

வெள்ளம் காரணமாக அக்கரைப்பற்று – கல்முனை வீதி பாலம் உடைவு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் நிந்தவூர் மாட்டுப்பள்ளை பிரதேசத்தில் அமைந்துள்ள 375/5 பாலம் இன்று (27) அதிகாலையில் உடைந்துள்ளது. இதனால், இந்த வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், வீதி…

மேல் கொத்மலை மூன்றாவது வான்கதவும் திறப்பு

– நீர்த்தேக்கத்தின் கீழ் மட்டத்திலுள்ளோர் விழிப்புடன் இருக்கவும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்தமையால் தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3ஆவது வான் கதவு இன்று (27) அதிகாலை திறக்கப்பட்டுள்ளது. நேற்று (26) நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்தமையால்…

வெள்ள நீரில் மூழ்கிய புதுக்குடியிருப்பு சுண்ணாம்புச்சூளை வீதி

கன மழை காரணமாக முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கைவேலி சுண்ணாம்புச்சூளை வீதி நீரில் மூழ்கியுள்ளதால் குறித்த வீதியை பயன்படுத்தும் மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்…

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு

நாட்டில் தற்போது நிலவும் மிகமோசமான சீரற்ற வானிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஐநூற்றுக்கும்…

2025 பட்ஜட்: ஜனவரி 09 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2025 நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேற்படி சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ள பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதை வேளை, 2025…

டியூசன் வகுப்புகளை தடை செய்யும் தீர்மானம் எதுவும் அரசிடம் இல்லை

ரியூசன் வகுப்புகளை தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதுபற்றித் தெரிவித்த அவர்; எதிர்காலத்தில்,கல்வித்துறையில் விரிவான…

எம்.எஸ்.உதுமாலெப்பை எம்.பிக்கு அட்டாளைச்சேனையில் பாராட்டு

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எஸ்.உதுமாலெப்பையை வரவேற்று பாரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபையின் அட்டாளைச்சேனை கிளை,ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அண்மையில் (23) இடம்பெற்றது. அட்டாளைச்சேனை ஜம்இயதுல் உலமா சபையின் தலைவர் ஓய்வு…

A/L பரீட்சையை தடுக்கும் மனு: டிச.12 இல் ஆராய்வதற்கு முடிவு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கக் கோரி, மாணவியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, டிச. 12 ஆம் திகதி ஆராய்வதற்கு உயர் நீதிமன்றம் (25) தீர்மானித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த…

புதையல் தோண்டும் செயற்பாட்டில் அரசு ஈடுபடவில்லை

வெயாங்கொடை, வந்துராவ ரஜமஹா விகாரைக்கருகில் புதையல் தோண்டுவதற்கான அகழ்வாராய்ச்சியில் அரசாங்கம் ஈடுபடவில்லையென, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த சந்திப்பில், அத்தனகல்லை நீதவானின் உத்தரவிற்கு அமைய இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர்…