Category: இலங்கை

மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு

பதுளை – பண்டாரவளை ரயில் பாதையில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பதுளைக்கு செல்லும் ரயில்கள் பண்டாரவளையில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகபுகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. பதுளைக்கும் – பண்டாரவளைக்கும் இடையிலான ரயில் வீதியில் மண்மேடுகளும், கற்களும் சரிந்து வீழ்ந்துள்ளமையினால்…

மன்னாரில் வெள்ளம் காரணமாக 43 ஆயிரம் பேர் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மாவட்டத்தில் 12 ஆயிரத்து 485 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 879 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.…

வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளுக்காக இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பு

அரசாங்கத்தின் முறையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த முதலீட்டு வாய்ப்புக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி கவனம் செலுத்தியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின்…

மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

மகாவலி நீரேந்துப் பகுதிகளில் நேற்றிரவு (25) பெய்த கடும் மழை காரணமாக மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திம்புலாகல, எச்சிலம்பட்டை, ஹிங்குராங்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு,…

கிழக்கில் இன்றும் நாளையும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

– பாடசாலை வளாகத்தில் நின்ற பாரிய மரம் முறிந்து வீழ்ந்தது நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியாக இயங்கி வரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்று (26) செவ்வாய்க்கிழமை மற்றும்…

மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

மேல்கொத்மலை நீர்தேக்க பிரதேசத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் இன்று (26) பிற்பகல் முதல் திறந்து விடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிக மழையுடனான காலநிலை…

GCE A/L பரீட்சைகள் நவம்பர் 27, 28, 29 இல் இடம்பெறாது

– நவம்பர் 30 முதல் அட்டவணைக்கு அமைய இடம்பெறும் தற்போது நடைபெற்று வரும் 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, பரீட்சைகள்…