Last Updated:

Champions Trophy | பும்ரா காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்பதில் சந்தேகம். ஹர்ஷித் ராணா அல்லது முகமது சிராஜுக்கு வாய்ப்பு.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் சிட்னி டெஸ்டின் 2 ஆம் நாள் ஆட்டத்தில் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக பும்ரா பாதியில் பெவிலியன் திரும்பினார். அதைத் தொடர்ந்து நியூசிலாந்தைச் சேர்ந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். காயத்தில் இருந்து பும்ரா முழுமையாக குணமடையவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பும்ரா பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்க உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் பும்ரா பங்கேற்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இடம்பெறாத பட்சத்தில் ஹர்ஷித் ராணா அல்லது முகமது சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டியில் பும்ராவிற்கு பதிலாக ஹர்ஷித் ராணா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link