Last Updated:
Chatbot, ChatGPT – யிடம் கேட்க கூடாத விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Chatbotகள் பொதுவாக உதவி அளிக்கக்கூடியவையாகவும், நல்ல ஒரு அசிஸ்டன்ட் ஆகவும் செயல்பட்டாலும் ஒரு சில விஷயங்களில் நாம் மிகவும் கவனமாக இருப்பதும், அவற்றை நம்புவதும், அதிலும் குறிப்பாக முக்கியமான ரகசியத்திற்குட்பட்ட தகவல்களை அவற்றிடம் பகிர்ந்து கொள்ளும்போதும் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம். இதுபோன்ற வழிகாட்டுதலுக்கு பலர் தற்போது ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸை நம்புவது ஒரு புதிய டிரெண்டாக மாறி வருகிறது என்பது சமீபத்திய சில சர்வேக்களில் தெரியவந்துள்ளது.
பலர் வழக்கமான சிகிச்சைக்கு பதிலாக தற்போது ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் கொடுக்கும் ஆலோசனைகளை நம்பி வருகின்றனர். ஆனால் தனிநபர் விவரங்கள் அல்லது மருத்துவம் சம்பந்தப்பட்ட தகவல்களை ஒருபோதும் ChatGPT மற்றும் பிற AI Chatbotகளுடன் பகிர்ந்து கொள்வது தவறு என்று நிபுணர்கள் எச்சரிக்கை வழங்குகின்றனர். அந்த வகையில் ChatGPT மற்றும் பிற AI Chatbot உடன் நாம் பகிர்ந்து கொள்ள கூடாத 7 விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தனிநபர் விவரம்:
ஒருபோதும் உங்களுடைய பெயர், முகவரி, போன் நம்பர் அல்லது இமெயில் முகவரி போன்ற தனிநபர் விவரங்களை Chatbotகளுடன் பகிர்ந்து கொள்ள கூடாது. ஏனெனில் இந்த தகவல் உங்களை அடையாளம் காணவும், உங்களுடைய செயல்பாட்டை டிராக் செய்யவும் உதவும்.
பொருளாதார விவரம்:
பொருளாதார விபரங்களை AI Chatbotகளுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுடைய வங்கி கணக்கு எண்கள், கிரெடிட் கார்டு நம்பர்கள் அல்லது சோஷியல் செக்யூரிட்டி நம்பர்களை நீங்கள் Chatbot உடன் பகிர்ந்து கொள்ளும்போது அதனால் உங்களுடைய பணம் அல்லது உங்கள் அடையாளம் திருடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
பாஸ்வேர்டுகள்:
ஒருபோதும் பாஸ்வேர்டுகளை AI Chatbotகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இந்த தகவலை பயன்படுத்தி உங்களுடைய அக்கவுண்டுகள் மற்றும் உங்கள் டேட்டாக்கள் திருடப்படலாம். உங்களுடைய ரகசியங்கள் உங்களுடைய ரகசியங்களை AI Chatbptகளுடன் பகிர்ந்து கொள்வது ஒரு தவறான யோசனை. ChatGPT என்பது ஒரு நபர் கிடையாது. எனவே உங்களுடைய ரகசியங்களை பாதுகாப்பாக உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள்.
மருத்துவம் அல்லது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஆலோசனை:
ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஒரு மருத்துவர் கிடையாது. எனவே எந்த விதமான மருத்துவ ஆலோசனையையும் அதனிடம் கேட்க வேண்டாம். அது மட்டுமல்லாமல் உங்களுடைய இன்சூரன்ஸ் நம்பர் மற்றும் பல போன்ற ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட தகவல்களையும் அதனுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
இந்த உலகம் தெரிந்து கொள்ள வேண்டாம் என்று நீங்கள் நினைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் AI Chatகளுடன் பகிர்ந்து கொள்ளும் எந்த ஒரு விஷயமும் அதில் சேமித்து வைக்கப்பட்டு, மற்றவர்களுக்கு ஷேர் செய்யப்படும் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே இந்த உலகம் தெரிந்து கொள்ளக் கூடாது என்று நீங்கள் நினைக்கும் விஷயத்தை ஒருபோதும் Chatbotகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
பாலியல் ரீதியான விஷயங்கள்:
Chatbotகள் பெரும்பாலும் பாலியல் ரீதியான விஷயங்களை ஃபில்டர் செய்துவிடும். எனவே நீங்கள் ஏதாவது தவறான விஷயத்தை கேட்கும்போது அது தடை செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் இன்டர்நெட் மறந்துவிடாது. எனவே நீங்கள் பகிர்ந்து கொள்ளும் அந்த தகவல் எங்கெல்லாம் செல்கிறது என்பது உங்களுக்கு தெரிய கூட வாய்ப்பில்லை.
January 03, 2025 5:32 PM IST