Last Updated:
Cinema | இங்கே ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டால், உதாரணமாக ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் எல்லா படத்திலும் அதே மாதிரி நடிக்க அழைக்கிறார்கள்.
“இங்கே ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டால், உதாரணமாக ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் எல்லா படத்திலும் அதே மாதிரி நடிக்க அழைக்கிறார்கள். ஸ்கிரிப்ட் எழுதும்போதே சாவு என வந்தால் என் பெயரை எழுதிவிடுவார்கள் என நினைக்கிறேன்” என நடிகர் கலையரசன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
ஷேன் நிகாம், கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ்காரன்’. இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் சென்னையில் நடந்த இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வில் பேசிய நடிகர் கலையரசன், “நான் இதன் பிறகு அதிக கதாபாத்திரங்களில் நடிக்க போவது கிடையாது. இங்கே நிலவும் சூழல் அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை என்பதே அதற்கு காரணம்.
Also Read: Kanguva | ஆஸ்கர் விருது பட்டியலில் ‘கங்குவா’ – சாத்தியமானது எப்படி?
நான் பல கதாபாத்திரங்களில் நடிக்க ரெடி. ஆனால், மலையாளத்தில் நடிகர்கள் பல நடிகர்களுடன் இணைந்து ‘மல்டி ஸ்டாரர்’ ஆக நடிப்பார்கள். திடீரென ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பார்கள். ஆனால், அவர்களை வைத்து ஹீரோவாகவும் படம் இயக்குவார்கள்.
ஆனால் இங்கே ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டால், உதாரணமாக ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் எல்லா படத்திலும் அதே மாதிரி நடிக்க அழைக்கிறார்கள். ஸ்கிரிப்ட் எழுதும்போதே சாவு என வந்தால் என் பெயரை எழுதிவிடுவார்கள் என நினைக்கிறேன். பாராட்டினாலும், கிண்டல் செய்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு நார்மலாக ஒரு படம் எடுத்தால் கூட அதிலும் என்னை இரண்டாவது ஹீரோவாக தான் எழுதுகிறார்கள். இதனால் இனிமேல் நான் மிகவும் தேர்ந்தெடுத்து, மிகவும் சிறப்பாக இருந்தால் தான் கதாபாத்திரங்களில் நடிப்பேன். இல்லாவிட்டால் ஹீரோவாக தான் நடிப்பேன்” என்றார்.
January 07, 2025 4:30 PM IST