ஆனால், வேளாண் துறைக்கு உதவும் வகையில் உருவாக்கப்படும் கண்டுபிடிப்புகள் விவசாயிக்கு லாபம் ஈட்ட உதவுவதுடன், வேளாண்மையையும் காக்க உதவுகிறது. அப்படித் தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையிலான கண்டுபிடிப்பைத் தான் சண்முகம் உருவாக்கியுள்ளார்.

சாதாரணமாகத் தென்னை விவசாயிகள் பறித்த தேங்காய்களை ஆட்கள் வைத்து உரிக்கும் போது காய்க்கு இவ்வளவு எனக் கூலி கொடுக்க வேண்டும். மேலும், இந்த காலத்தில் போதுமான அளவு வேலையாட்களும் கிடைப்பதில்லை. இதனால் எண்ணிய வேலையை முடிப்பது என்பது முடியாத காரியமாக உள்ளது.

இதையும் படிங்க: ONGC Recruitment 2025: மத்திய அரசு நிறுவனத்தில் 108 வேலைவாய்ப்பு… ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…

இப்படிப்பட்ட சூழலில் எளிதாகப் பறிந்த தேங்காய்களை உரித்து விவசாயிகளுக்கு உதவக் கூடிய கருவியை சண்முகம் வடிவமைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “என் கம்பெனி பெயர் பாஸ் மெஷினரி ஒர்க்ஸ். நான் புதுமையாகத் தேங்காய் மட்டை உரிக்கக் கருவி ஒன்று கண்டுபிடித்து இருக்கிறேன். இது ஏற்கனவே இருக்கக் கூடியது தான்.

ஆனால், நான் கண்டுபிடித்தது எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் இருக்கும். எங்கு வேண்டுமென்றாலும் எடுத்துச் செல்லும் வகையில் இருக்கும். இதை கொண்டு செல்ல இரு சக்கர வாகனத்தில் இணைத்துக் கூட கொண்டு செல்லலாம். அந்த வகையில் வடிவமைத்து இருக்கிறேன்.

இதை பயன்படுத்த எந்தவித அனுபவமும் தேவையில்லை. யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். இதற்கு பராமரிப்பு செலவு ஒன்றும் பெரிய அளவில் இருக்காது. ஒரு லட்சம் தேங்காய்க்கு ஒருமுறை அதில் இருக்கும் ரப்பரை மாற்றினால் போதுமானது. இதை தவிர வேறொன்று அதற்கு தேவைப்படாது. துடைத்து கிரீஸ் போட்டால்…

இதையும் படிங்க: Successful Dairy Farmer: கிர் மாடு வளர்ப்பில் மாதம் ரூ.2 லட்சம் வருமானம்… லாபம் கொட்டும் ஒருங்கிணைந்த பண்ணை முறை…

இது ஒரு மணி நேரத்திற்கு 1300 தேங்காய்கள் வரை மட்டை உரிக்கும். இது விவசாயிகள், தேங்காய் வியாபாரிகள் என எல்லாருக்கும் பயன்படும் வகையில் வடிவமைத்து இருக்கிறேன். தேங்காய் விவசாயம் செய்பவர்களுக்குப் பணியாற்ற ஆட்கள் வருவதில்லை. அதனால் என்னுடைய 35 வருட அனுபவத்தில் நான் இதை உருவாக்கினேன். இந்த இயந்திரத்தின் விலை ஒன்றரை லட்சம் மட்டுமே, அதனுடன் 12% GST வரும்.

இதில் போட்ட பணத்தை ஒரு மாதத்திலேயே எடுத்து விடலாம், அந்த அளவிற்குப் பயனுள்ளதாக இருக்கும். ஒரு நாளைக்கு 8000 தேங்காய்கள் உரித்தாலும் 8000 ரூபாய் மிச்சமாகும். வேலை ஆட்கள் 2 பேருக்கு 2 ஆயிரம் கொடுத்தால் 6 ஆயிரம் மிச்சம் ஆகும். இதன் அடிப்படையில் தான் நான் சொன்னேன் ஒரு மாதத்தில் போட்ட பணத்தை எடுத்து விடலாம் என்று. இன்னும் சின்னதாகச் செய்வதற்கு முயற்சிக்கிறேன்.

இதை கண்டுபிடிக்கக் காரணம் விவசாயம் செய்ய ஆட்கள் கிடையாது. காரணம் மழை, வெய்யில் போன்ற காரணங்கள் தான். படித்து விட்டு வேறு வேலைக்குச் சென்று விடுகிறார்கள். விவசாயம் செய்ய ஆட்கள் இல்லாத காரணத்தால் தான் நான் செய்த வேலையை விட்டு விட்டு இதை செய்தேன். இது என்னுடைய முதல் படைப்பு. இன்னும் போக போக இன்னும் தயாரிப்பேன்.

இதையும் படிங்க: நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பே கல்வி சுதந்திரம்… 200 ஆண்டுகளைக் கடந்த பெண்கள் பள்ளி…

நார்மலாக 10000 தேங்காய் மட்டை உரிக்க குறைந்தபட்சம் 10 பேராவது தேவைப்படும். இந்த மெஷின் இருந்தால் இரண்டு பேர் இருந்தால் போதுமானது. மீதமுள்ள எட்டு பேர்களுடைய கூலி பணம் நமக்கு மிச்சம். தேங்காய் மட்டை உரிக்க ஆட்கள் இல்லாத காரணத்தினால் நிறையத் தேங்காய்கள் வீணாகப் போகிறது. இந்த கருவியைப் பயன்படுத்தி யார் வேண்டுமென்றாலும் தேங்காய் மட்டையை உரித்து கொள்ளலாம்.

பாதிப்பு வரும் என்று பயப்பட வேண்டாம். அதில் மேல் சுற்றிக் கொண்டிருப்பது ரப்பர் தான். அதில் கை பட்டாலும் ஒன்றும் ஆகாது. இதற்கான அனைத்து ஆவணங்களும் வாங்கி வைத்திருக்கிறேன். இதற்கு மானியமும் இருக்கிறது, அதில் அப்ளை பண்ணி வாங்கிக் கொள்ளலாம். இதற்குப் பெரிதும் கரண்ட் செலவு ஆகாது. குறைந்த செலவில் தான் செலவாகும்” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link