இன்று உலக அளவில் பில்லியன் கணக்கான மக்கள் தங்களுடைய அன்புக்குரியவர்களுடனும், தொழில் சம்பந்தமாகவும், பணி நிமித்தமாகவும் தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தும் ஒரு முக்கியமான அப்ளிகேஷன் வாட்ஸ்அப். இதனை நன்கு புரிந்து கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் யூசர்களுடைய அனுபவத்தை மேம்படுத்துவதற்காக குறிப்பிடத்தக்க அப்டேட்டுகளை அவ்வப்போது அறிமுகப்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில் 2024ல் அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் முக்கியமான ஒரு அம்சம் மல்டி டிவைஸ் சப்போர்ட் அதாவது உங்களுடைய வாட்ஸ்அப் அக்கவுண்டை பல சாதனங்களில் இணைத்து ஒரே நேரத்தில் அனைத்து சாதனத்திலும் பயன்படுத்துவதற்கு இந்த அம்சம் உங்களுக்கு உதவும். ஆகவே இந்த பதிவில் மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சத்தை எப்படி அமைப்பது மற்றும் பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விளம்பரம்

முன்னதாக யூஸர்கள் பல்வேறு போன்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதற்கு தனித்தனி போன் நம்பர்களை கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இந்த 2024 அப்டேட்டுக்கு பிறகு ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்டை ஒரே நேரத்தில் பல சாதனங்களில் அதிலும் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் உட்பட பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை வாட்ஸ்அப் கம்பானியன் மோடு (Companion mode) என்று அழைக்கிறது. இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்கு யூசர்கள் தங்களுடைய பிரைமரி போனை எப்பொழுதும் ஆக்டிவாக வைத்திருப்பது அவசியம்.

விளம்பரம்

இதையும் படிங்க : குறைந்த விலையில் சூப்பர் டேப்லெட் அறிமுகம்! ஆஃபர் வழங்கும் Acer

கம்பானியின் மோடை அமைப்பது எப்படி?

கம்ப்யூட்டரை இணைக்க: வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவதற்கு முதலில் உங்களுடைய பிரைமரி போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறந்து கொள்ளுங்கள். உங்கள் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் டிஸ்ப்ளே செய்யப்பட்டுள்ள QR கோடை ஸ்கேன் செய்யுங்கள். இந்த செயல்முறை விண்டோஸில் உள்ள வாட்ஸ்அப் டெஸ்க்டாப் அப்ளிகேஷனுக்கும் பொருந்தும்.

மொபைல் போன் கவர் பயன்படுத்துவதால் இத்தனை தீமைகளா.?


மொபைல் போன் கவர் பயன்படுத்துவதால் இத்தனை தீமைகளா.?

மற்றொரு போனை இணைக்க:

வாட்ஸ்அப் அப்ளிகேஷனை உங்களுடைய செகண்டரி போனில் இன்ஸ்டால் செய்யுங்கள். இன்ஸ்டால் செய்த பிறகு பிரைவசி பாலிசிகளை ஒப்புக்கொண்டு அப்ளிகேஷனின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை கிளிக் செய்யுங்கள். இந்த போனை கம்பானியன் டிவைஸாக இணைப்பதற்கான ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். உங்களுடைய பிரைமரி போனில் இருந்து QR கோடை ஸ்கேன் செய்யும் படி கேட்கப்படுவீர்கள். இந்த படிகளை நீங்கள் நிறைவு செய்த பிறகு உங்களுடைய எல்லா சாட்டுகளும் பிரைமரி போனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சாதனங்களிலும் காண்பிக்கப்படும்.

விளம்பரம்

கட்டுப்பாடுகள்

இந்த பல சாதன அம்சம் நமக்கு பல வழிகளில் நன்மைகள் தந்தாலும் இதில் ஒரு சில கட்டுப்பாடுகளும் உள்ளன. பிரைமரி போனை தவிர மற்ற சாதனங்களில் இருந்து உங்களுடைய லொகேஷனை ஷேர் செய்வது அல்லது ஸ்டேட்டஸ் போடுவது போன்றவற்றை நீங்கள் செய்ய முடியாது. கூடுதலாக உங்களுடைய பிரைமரி சாதனம் 14 நாட்களுக்கு மேல் இன்டர்நெட்டில் இணைக்கப்படாமல் இருந்தால் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பிற சாதனங்களில் உள்ள வாட்ஸ்அப் கணக்கு லாக்-அவுட் செய்யப்படும்.

.



Source link