Last Updated:

கிரெடிட் கார்டு நிலுவைக்கு 30 சதவீதம் வரை மட்டுமே வட்டி வசூலிக்கலாம் என 2008ம் ஆண்டு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

News18

கிரெடிட் கார்ட் நிலுவைத் தொகை செலுத்த கால தாமதமானால் 30 சதவீதத்துக்கு மேல் வட்டி விதிக்க வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

கிரெடிட் கார்டு நிலுவைக்கு 30 சதவீதம் வரை மட்டுமே வட்டி வசூலிக்கலாம் என 2008-ம் ஆண்டு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு எதிராக பல்வேறு வங்கிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அந்த மனுக்கள் நீதிபதிகள் பெலா எம். திரிவேதி மற்றும் சதீஷ் சந்திரா ஷர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது 30 சதவீதத்துக்கு மேல் வட்டி வசூலிப்பதை நியாயமற்றது என தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அறிவித்ததை சட்டவிரோதமானது என நீதிபதிகள் கூறினர். இது, ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தில் முறையின்றி தலையிடும் செயல் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: ரூ.60 லட்சம் ஹோம் லோன் vs ரூ.60 லட்சத்திற்கு SIP முதலீடு.. இரண்டில் எது பெஸ்ட்?

மேலும், கிரெடிட் கார்டு வைத்திருப்போரிடம், எதையும் தவறாகச் சித்தரித்து வங்கிகள் ஏமாற்றவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கிரெடிட் கார்டு வைத்திருந்தால் கிடைக்கும் சலுகைகள் மற்றும் அபராதம் விதிக்கப்படும் நடைமுறைகள் குறித்து பயனாளர்கள் நன்கு அறிந்திருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. வங்கிகள் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இடையே ஏற்பட்ட பரஸ்பர ஒப்பந்தத்தை மாற்றும் உரிமை நுகர்வோர் ஆணையத்துக்கு இல்லை என நீதிமன்றம் தெரிவித்து, 16 ஆண்டுகளுக்கு முன் விதிக்கப்பட்ட உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது.



Source link