தற்போதைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஓர் வங்கி கடன் சேவையாக கிரெட் கார்டு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, அதன் தன்மை மற்றும் பிரிவுகளுக்கு ஏற்ப கிரெடிட் கார்டுகள் பல்வேறு வசதிகளை வழங்குகின்றன. அந்த வகையில், பல நன்மைகளுடன் எரிபொருளை சேமிக்க உதவும் ஃப்யூயல் கிரெடிட் கார்டு பற்றி தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.
இந்த கிரெடிட் கார்டுகள், பெட்ரோல் விலை உயரும்போது கூடுதல் கட்டணங்களின் சுமையை குறைக்க உதவலாம். அதுமட்டுமின்றி, எரிபொருள் நிரப்பும்போது ரிவார்டு பாய்ண்ட் மற்றும் கேஷ்பேக் போன்ற பிற பலன்களையும் வழங்குகின்றன. கடனாகப் பெற்ற தொகையின் மீதான வட்டிக் கட்டணத்தைத் தவிர்த்து சேமிப்பை அதிகரிக்க உங்கள் செலவுகளின் அடிப்படையில் சரியான கிரெடிட் கார்டை தேர்ந்தெடுப்பது அவசியம்.
பெட்ரோல் விலை அதிகரிக்கும் போது, எரிபொருள் கூடுதல் கட்டணம் கூடுதல் சுமையாக தோன்றும். அதிர்ஷ்டவசமாக, எரிபொருள் கூடுதல் கட்டணத்தை தள்ளுபடி செய்யும் கிரெடிட் கார்டுகள் இந்த செலவைக் குறைக்க ஒரு சிறந்த வழியை வழங்குகின்றன. ரொக்கமில்லா பரிவர்த்தனைகளின் வசதியைத் தவிர, பெட்ரோல் நிலையங்களில் கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்க இந்த கார்டுகள் உதவுகின்றன. இந்த காரணத்திற்காக, ஒவ்வொரு முறை பெட்ரோல் நிரப்பும் போதும் பணத்தைச் சேமிக்க உதவும் சிறந்த பியூவல் கிரெடிட் கார்டுகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
கிரெடிட் கார்டுகள் என்றால் என்ன?:
உங்களுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படும் நேரத்தில், உங்கள் செலவுகளை எளிதாக நிர்வகிக்க கிரெடிட் கார்டு உதவுகிறது. ஒருவர் கிரெட் கார்டு மூலம் பல்வேறு நன்மைகளை பெற முடியும். குறிப்பாக கிரெட் கார்டு பயன்படுத்தி நீங்கள் செய்யும் செலவை, திருப்பி செலுத்த 45 நாட்கள் உங்களுக்கு கால அவகாசம் தரப்படுகிறது. இந்த காலக்கெடுவை தாண்டும் பட்சத்தில் அது உங்களுக்கு சிக்கலைத் தரலாம். குறிப்பிட்ட நேரத்தில் நிலுவைத் தொகையை நீங்கள் செலுத்தினால், உங்களுக்கு எந்த வட்டியும் விதிக்கப்படாது. கூடுதலாக, பல கிரெடிட் கார்டுகள் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் வருகின்றன, இது அவற்றின் பிரபலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது.
ஃப்யூயல் கிரெடிட் கார்டு என்றால் என்ன?:
ஃப்யூயல் கிரெடிட் கார்டுகள், குறிப்பாக பெட்ரோல் நிலையங்களில் பணத்தை சேமிக்க பெரிதும் உதவுகின்றன. இதன் பொதுவான அம்சங்களில் எரிபொருள் வாங்குதல், ரிவார்டு பாய்ண்ட்கள், எரிபொருள் கூடுதல் கட்டணங்களுக்கான தள்ளுபடிகள் மற்றும் சில நேரங்களில் வாகன பழுதுபார்ப்பு அல்லது சாலையோர உதவி போன்ற சேவைகளில் தள்ளுபடிகள் ஆகியவை அடங்கும்.
டிசம்பர் 08, 2024 நிலவரப்படி பேங்க்பசார் வழங்கிய ஆதாரத்தின்படி, சிறந்த 5 ஃப்யூயல் கிரெடிட் கார்கள்:
பிபிசிஎல் எஸ்பிஐ கிரெடிட் கார்டு – சேருவதற்கான கட்டணம் – ரூ.499
இந்தியன் ஆயில் கோடக் கிரெடிட் கார்டு – சேருவதற்கான கட்டணம் – ரூ.499
ஐசிஐசிஐ எச்பிசிஎல் கோரல் கிரெடிட் கார்டு – சேருவதற்கான கட்டணம் – ரூ.199 + ஜிஎஸ்டி
இந்தியன் ஆயில் எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு – சேருவதற்கான கட்டணம் – ரூ.500
ஐசிஐசிஐ எச்பிசிஎல் சூப்பர் சேவர் கிரெடிட் கார்டு – ரூ.500 + ஜிஎஸ்டி.
சிறந்த ஃப்யூயல் கிரெடிட் கார்டுகளின் நன்மைகள்:
1. பிபிசிஎல் எஸ்பிஐ கிரெடிட் கார்டு: பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள், திரைப்படங்கள் மற்றும் மளிகை சாமான்களில் செலவழித்த ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், ஐந்து மடங்கு ரவார்டு பாய்ண்டுகளைப் பெறுவீர்கள். பெட்ரோல் வாங்கும் போது 4.25% மதிப்பு திரும்பப் பெறுவீர்கள். இந்தியன் ஆயிலுக்கான கிரெடிட் கார்டில் ரூ.4,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு எரிபொருள் கூடுதல் கட்டணம் விதிக்கப்படாது.
2. இந்தியன் ஆயில் கோடக் கிரெடிட் கார்டு: கேஷ்பேக் மற்றும் வால்யூ-பேக்கின் நன்மைகள், எரிபொருள் வாங்கும் போது இந்தியன் ஆயில் பம்புகளில் 5% வரை சேமிக்கலாம். மளிகைப் பொருட்களுக்கு நீங்கள் 2% ரவார்டு பாய்ண்டுகளை பெறுவீர்கள். அதிக செலவில் 0.5% ரிவார்டு பாய்ண்டுகளைப் பெறுவீர்கள்.
3. ஐசிஐசிஐ ஹெச்பிசிஎல் கோரல் கிரெடிட் கார்டு: கேஷ்பேக் மற்றும் வால்யூ-பேக்கின் பலன்கள், இது ஹெச்பிசிஎல் பம்புகளில் செலவிடப்படும் எரிபொருளுக்கு 2.5% கேஷ் பேக் வழங்குகிறது (ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ₹100 வரை) வழங்கப்படுகிறது.
4. இந்தியன் ஆயில் ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு: இந்தியன் ஆயில் நிலையங்களில் எரிபொருளை நிரப்பும்போது, 5% கூடுதல் பியூவல் பாய்ண்டுகள் கிடைக்கும். உங்கள் மளிகைச் செலவுகளுக்கு 5% பியூவல் பாய்ண்டுகளும், மற்ற இடங்களில் செலவழித்த ஒவ்வொரு ரூ.150க்கும் 1 பியூவல் பாய்ண்டுகள் கிடைக்கும்.
5. ஐசிஐசிஐ ஹெச்பிசிஎல் சூப்பர் சேவர் கிரெடிட் கார்டு: இந்தியன் ஆயில் நிலையங்களில் எரிபொருளை நிரப்பும்போது, 5% பியூவல் பாய்ண்டுகளை பெறலாம். பில் செலுத்துதல் மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு 5% பியூவல் பாய்ண்டுகளை பெற முடியும். செலுத்தப்படும் ஒவ்வொரு ரூ.150க்கும் 1 பியூவல் பாய்ண்டுகளைப் பெறுவீர்கள்.
சிறந்த ஃப்யூயல் கிரெடிட் கார்டை தேர்வு செய்வது எப்படி?:
பியூவல் கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுக்கும்போது பின்வரும் காரணிகளைக் கவனியுங்கள்:
சேமிப்பு திறன்: எரிவாயு வாங்குவதில் நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதைக் கணக்கிடுங்கள்.
எண்ணெய் நிறுவன கூட்டாண்மை: பலன்கள் நாடு முழுவதும் கிடைக்கிறதா அல்லது குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்களில் மட்டும் கிடைக்கிறதா எனச் சரிபார்க்கவும்.
கூடுதல் கட்டணம் இல்லை: நீங்கள் வாங்கும் கார்டு கூடுதல் பெட்ரோல் கட்டணம் வசூலிக்கிறதா, இல்லையா என்பதை சரிபார்க்கவும்.
செலவு வரம்புகள்: உங்கள் வெகுமதிகளை அதிகரிக்க, செலவு வரம்பு மிகக் குறைவாக வழங்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
வருடாந்திர கட்டணம்: குறிப்பிட்ட வருடாந்திர செலவு வரம்பில் தள்ளுபடி செய்ய முடியுமா என்பதை தீர்மானிக்க, வருடாந்திர கட்டணத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
முடிவில், உங்கள் எரிபொருள் செலவைக் குறைக்கவும், கூடுதல் கட்டணச் சுமையைக் குறைக்கவும் உதவும் சரியான கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுக்கவும். உங்களது தேர்வுகள் மற்றும் செலவு செய்யும் நடத்தைக்கு ஏற்ப நீங்கள் பெறும் சேமிப்பை மேம்படுத்தும் வகையில் கிரெடிட் கார்டை தேர்வு செய்யவும்.
வட்டிக்கு பணம் செலுத்துவதைத் தவிர்க்க, உங்கள் கிரெடிட் கார்டை ஒருபோதும் கவனக்குறைவாகப் பயன்படுத்தாதீர்கள், மேலும் ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் செலுத்த வேண்டிய முழுத் தொகையும், முழுமையாக செலுத்தப்படுவதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
.